Friday, August 9, 2024

பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -




                                       - இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI


 யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc  யு டியூப்பில் வ.ந.கிரிதரனின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

மேற்கு நாடு நோக்கிப்  பொருள் தேடச் சென்ற கணவனைப் பற்றிய  தகவல்கள் எவையுமற்று வாடும் பெண் ஒருத்தியின் உணர்வுகள் இவை. அவள் தன் உணர்வுகளை நட்சத்திரத் தோழியரிடம் உரைக்கின்றாள். உதவும்படி கேட்கின்றாள்.

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

Thursday, August 8, 2024

தரணித் தடாகத்தில் அன்புத்தாமரை பூக்கட்டும். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்; AI SUNO -

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=UeafkwtXu6Q

மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

மதம்! மொழி! இனம்! நிறம்!,
மதிப்போம் அவரவர் போக்கை. ஆனால்
மானுடரே. வேண்டாம் பிரிவினைகள்.
மானுடரே வேண்டாம் மோதல்கள்.

ஐந்து விரல்கள் நமக்கு.
அனைத்தும் அளவில் ஒன்றல்ல.
ஐந்தும் சேர்ந்தாலே பயன்.
அல்லாவிடில் பயன் என்ன?


மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

Wednesday, August 7, 2024

இயற்கையின் பேரழகு. - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4

இயற்கையின் பேரழகு.  - வ.ந.கிரிதரன் - 


 

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இருளின் மத்தியில் ஒளியென்னும்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
அதிகாலை விடிவெள்ளி என்பேன்.
அங்கு அது கோள் என்றபோதும்.
நட்சத்திரம் என்னும் சொல்லை
நான் ஒரு குறியீடாகவே
இங்கு பாவித்தேன். அறிவீர்.

ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -


இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM

 

ஓவியம் AI

ஆழ்  மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.

Tuesday, August 6, 2024

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -


- ஓவியம்: AI  | இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc


கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது. 

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்!  - வ.ந.கிரிதரன் -

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

அகதியாகக்  கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

சட்டபூர்வமாகவே அடைக்கலம் கோரினேன்.
எட்டு மணி Transit விசாவுடன் கோரினேன்.
சட்டபூர்வக் கோரிக்கையாளர் என்றால்
எட்டுமணி கடந்ததும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

குறிப்பேட்டுப் பதிவுகள் - களத்தில் குதித்திடு! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=oXpKNOlmVTw

இக் கவிதையை என் குறிப்பேட்டில் 14-11-1982  அன்று எழுதினேன். அன்றிருந்த, அக்காலச் சூழலின் வெளிப்பாடாக வெளிப்பட்ட என் மனத்தின் வெளிப்பாடு. -

என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுய கவுரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகர முடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினைக் குதறி எறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியின் ஒவ்வொரு துளியும்,
இளம்பரிதியின் ஒவ்வொரு கதிரும்,
விருட்சத்தின் ஒவ்வோர் இலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!

Monday, August 5, 2024

கனவில் வந்தாய்! (ஆண் குரல்) - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=5B_z5ukozpM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...