Monday, August 5, 2024

கனவில் வந்தாய்! (ஆண் குரல்) - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=5B_z5ukozpM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.அதை நினைத்தேன் அப்போது. ஆம்.
அது உண்மையாக இருக்கக் கூடும்.
அதனால்தான் நீ அக்கனவில் வந்தாயோ.
அன்பே. நீ அக்கனவில் வந்தாயோ.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

கனவில் உன்னைக் கண்டது
நனவிலும் தொடர்கிறது அன்பே.
நினைவில் நிறைந்தாய் அன்பே
நீக்கமற என்பேன் அன்பே.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

மானுட வாழ்வில் அன்பே
மறக்க முடியாத அனுபவம் காதல்.
உறக்கமின்றித் தவிக்க வைக்கும்.
உள்ளவரை உளத்தை வாட்டி வைக்கும்.
கனவில் வந்தாய் அன்பே
காதல் உணர்வு தந்தாய்
நினைவில் நிறைந்தாய் அன்பே
நீக்கமற என்பேன் அன்பே

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்


No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்