Monday, August 26, 2024

வ.ந.கிரிதரனின் பாடல்: காலையின் வருகை.



  இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

காலையின் வருகை!

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்கும்.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகும்.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

குருவிகள் வாழ்த்துப் பா இசைக்கும்.
குளங்களில் தாமரை இதழ் விரிக்கும்.
தண் கதிர் பரப்பும் கதிரின்
தண் அணைப்பில் உலகம் விழிக்கும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

இருள் நீங்கும் ஒளி பிறக்கும்
இருப்பில் இடர் நீங்கும். ஆம்!
இடர் நீங்கி களி பிறக்கும்.
இதுதான் காலை கூறும் அறிவுரை.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

வாழ்க்கையில் சவால் கண்டு தளராதீர்.
வளம் வரும்., நலம் மிகும்.
பகல் பிறப்பதும் அது போல்தான்.
பாரில் எங்கும் ஒளி பிறக்கும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்