Monday, August 26, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.


இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையைப் பேணுவோம். 


இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

உணர்வால் தாழ்ந்து கிடக்கும் சமயங்களில்
உற்சாகம் பெறுவதற்கு உதவுவது இயற்கை.
மனம் சோர்ந்து கிடக்கும் பொழுதுகளில்
மனச் சோர்வு அகற்றுவதும் இயற்கை.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

இன்பத்தை வாழ்வுக்கு வழங்குவது  இயற்கை.
இருப்புக்கு அர்த்தம் தருவதும் இயற்கை.
இயற்கையைப் பேணுவது நமது  கடமை.
இயற்கையைப் பேணுவோம், வளம் சேர்ப்போம்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

No comments:

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்