Saturday, August 10, 2024

எம்ஜிஆர் படப் பாடல்கள் - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

 - இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.  

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=c0UWw76yU0U

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன் என்று கூறுவேன்.
எடுத்துரைப்பேன் நான் கேளீர்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாசிக்கும் வாய்ப்பற்ற மக்கள்
வசிக்கின்றார் கோடிக் கணக்கில்.
நூல் படிக்கும் வாய்ப்பற்றோர்
நூல் எம்ஜிஆர் பாடல்களே.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

நல்ல கருத்தை எடுத்துரைத்தால்
சொல்வதை மீண்டும் சொல்வதால்
நல்ல கருத்து நிலைக்கும்.
நிலைத்து நிற்கும் மூளையில்.

எம்ஜிஆர் பாடல் செய்வதெல்லாம்
எடுத்துக் காட்டுவது எல்லாம்
நல்ல கருத்தை விதைப்பதுவே.
உள்ளத்தில் உரம் ஏற்றுவதே.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

கற்றவர் கல்லாதவர் அனைவரும்
கேட்பது எம்ஜிஆர் பாடல்களை.
கேட்பதால் நல்ல கருத்துகள்
கேட்பவர் உள்ளங்களில் படியும்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்வின் வெற்றிக்கு நூல்கள்
தாழ்வு நீங்கிட நூல்கள்
எத்தனை நூல்கள் எழுதுவர்.
அத்தனையும் எவர் வாசிப்பர்.

அத்தகைய கருத்துகளை வழங்கும்
எம்ஜிஆர் படப் பாடல்கள்
சமுகப் பிரக்ஞை மிக்கவை.
சமூக நீதி போதிப்பவை.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

விடுதலையை வேண்டும் பாடல்கள்.
வறுமைக்கு வழிகூறும் பாட;ல்கள்.
எண்ண மேன்மைப் பாடல்கள்.
எளியவரை ஏற்றிடும் பாடல்கள்.

ஆரோக்கியக் கருத்துள்ள பாடல்கள்.
அனைவரையும் எழவைக்கும் பாடல்கள்.
அனைவரையும் வாழ வைக்கும்
அருமையான எம்ஜிஆர் பாடல்கள்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

 



No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்