Sunday, August 4, 2024

எண்ணம் நிறைவேறும் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இது ஒரு காதல் பாடல். காதலர்கள் உரையாடுவது போன்று அமைந்த பாடல். ஆண், பெண் குரலை வேறு படுத்திக் காட்டுவதில் SUNO சிரமம் தருகின்றது. நண்பர்களே! ஆணும், பெண்ணும் இணைந்து பாடுகையில்; , குரல்களை வேறுபடுத்திப் பாடலை SUNO மூலம் இலகுவாக உருவாக்கும் வழிகள் உள்ளனவா? அநேகமான சமயங்களில் SUNO குரல்களை மாற்றி விடுகின்றது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=xJ4HZTrBaXA

ஆண்:

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.
பெண்:

யார் கூட்டி வைத்தார் நம்மை
கூட்டி வைத்தவர் உறவைக்
குலைத்து வைத்ததும் ஏனோ?
கலைத்து வைத்ததும் ஏனோ?

ஆண்:

உண்மை உறவு கலைவதில்லை.
உண்மை உறவு குலைவதில்லை.
உண்மை என்னை நம்பு. கண்னே.
உண்மை என்னை நம்பு.

பெண்:

அன்பே.
அந்த நம்பிக்கையில் வாழ்கின்றேன்.
இந்தப் பிறப்பில் நீயே என் துணை.
எந்தப் பிறப்பிலும் நீயே துணையாகச்
சொந்தம் தொடரவே மனம் விரும்புகிறது.

ஆண்:

அன்பே.
பிரிவு நீங்கி உன்னைச் சேர்வேன்.
தெரிவை உன் எண்ணம் நிறைவேறும்.
என் எண்ணம் உண்மையாயின் அன்பே
உன்னை நான் நிச்சயம் சேர்வேன்.

பெண்:

அன்பே.
உன் சொற்கள்
என் நெஞ்சின் சூட்டைத் தணித்தன,.
என் எண்ணமும் அதுவே.
நல்லது நடக்கும் அன்பே.
நல்லதையே நினைப்போம்.
அல்லவை தூர ஓடட்டும் அன்பே.
நல்லவை நம்மை நாடி வரட்டும்.

ஆண்:

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

எம் எண்ணம் நிறைவேறும்.
நம் எண்ணம் நிறைவேறும்.
இனியவற்றை எண்ணுவோம். நாம்
இன்பத்துடன் இருப்போம்.


No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்