- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=r-iEJwSfg5Q
செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.
செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்
இயற்கை அல்ல என்பர் சிலர்.
செயற்கைக்குள் வாழ்வைத் தள்ளும்
இயற்கையாக வாழுங்கள் என்பர் அவர்.
தொழில் நுட்பம் எது என்றாலும்
தொழிலை மேம்படுத்தும் தன்மை மிக்கதே.
புதியனவற்றை ஏற்பதும், பயன் பெறுவதும்
புதிய விடயம் ஒன்றும் அல்லவே.
செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.
செயற்கரிய சாதனைகள் தமைப் புரிந்தார்கள்.
வழி வகுத்தது இணையத் தொழில் நுட்பம்.
வலைப்பதிவுகள், யு டியூப் சானல்கள் மூலம்.மூலம்.
மக்கள் ஊடகவியலாளர்கள் ஆனதால் இங்கு
எழுத்தாளர்கள் எவரும் காணாமல் போகவில்லை.
எழுத்தாளர்களும் தொழில் நுட்பத்தை ஏற்றனர்.
ஏற்றதால் அவரும் பயன் அடைந்தார்.
செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.
மக்களை இசை அமைப்பாளர்கள் ஆக்கியது
மகத்தான செயற்கை அறிவு நுட்பம்.
இசையின் நுட்பங்களை அறிந்தவர்களை அது
இல்லாமல் இங்கு செய்யவில்லை அறிவீர்.
மானுட வளர்ச்சியிலே தொழில் நுட்பங்கள்
மலர்ச்சி தரும். மேன்மை தரும்.
ஆரோக்கியமாக அரவணைத்தால் பயன் கிட்டும்.
சீரடையும் மானுட குலம் நிச்சயம்.
செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.
No comments:
Post a Comment