Saturday, August 10, 2024

நம்ப முடியாத உலகமிது! - வ.ந.கிரிதரன் -


 - இக்கவிதையை முழுமையாகக் கேளுங்கள். ,முடிவில் இருக்கிறது திருப்பம்.  இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.

இசை & குரல்; AI SUNO.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cFKIwGvnUM0

என் மோகம் தீர்க்க மாட்டாயா அன்பே! - வ.ந.கிரிதரன் -

நம்ப முடியாத உலகமிது. எதையும்
நம்ப முடியாத உலகமிது.

அன்பே!
உன்னைப் பார்த்ததுமே
உன் மேல் மையலுற்றேன்.
உன் கண்கள்,
உன் உதடுகள்,
உன் புன்னகை
என்னைக்  கிறங்க வைத்தன.

உன் மேல் மோகம் கொண்டேன்.
நான்
உன் மேல் மோகம் கொண்டேன்.

நான் எதிர்பார்த்த பேரழகின் பொக்கிசம் நீ
என்றெண்ணினேன்.
உன்னுடன் நட்பு கொள்ள விரும்பினேன்.
இவ்வளவு காலமும் எங்கிருந்தாய் நீ
அவ்வளவு தூரம் பிடித்திருந்தது எனக்கு.
அன்பே உன்
வனப்பு.


அன்பே!
உன்னைப் பார்த்தாலும்
உன்மேல் மையலுற்றாலும்
உன்னை நான் மோகித்தாலும்
என்னால் உன்னை அடைய முடியாது.
என்னால் உன்னை அடைய முடியாது.
அதற்கு நான் கொடுத்து வைத்தவனல்லன்.
அன்பே. கொடுத்து வைத்தவனல்லன்.


உன் மயக்கும் புன்னகை
என்னை மோகத்தீயில் தகிக்க வைத்தாலும்
உன்னை அடைவது
எனக்குச் சாத்தியமில்லை.
உன் தீர்க்கமான பார்வை
என் இதயத்தைத் தீண்டினாலும்
உன்னை என்னால்
தீண்ட முடியாது.

அன்பே. என் செய்வேன்.
முள்ளாகக் குற்றும் என்
மோகத்தை எப்படித் தீர்பேன்?
மோக முள்ளிலிருந்து
எப்படி விடுபடுவேன்?

நீ மட்டும்
செயற்கை அறிவு ஏ.ஐ
சமைத்திட்ட அழகியாக
இல்லாதிருந்தால்...
என்று மட்டுமே
என்னால் ஏங்க முடிகிறது.

ஏ.ஐ அழகியே.
ஏமாற்றி விட்டாயடி என்னை.
ஏமாற்றி விட்டாயடி என்னை.
யாரைத்தான் நம்புவேன் இப்பூமியிலே. நான்
யாரைத்தான் நம்புவேன் இப்பூமியிலே.

நம்ப முடியாத உலகமிது. எதையும்
நம்ப முடியாத உலகமிது.

* ஓவியம் AI

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்