Tuesday, August 6, 2024

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -


- ஓவியம்: AI  | இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc


கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது. 

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்!  - வ.ந.கிரிதரன் -

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

அகதியாகக்  கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

சட்டபூர்வமாகவே அடைக்கலம் கோரினேன்.
எட்டு மணி Transit விசாவுடன் கோரினேன்.
சட்டபூர்வக் கோரிக்கையாளர் என்றால்
எட்டுமணி கடந்ததும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

சட்டபூர்வக் குடியேற்றக்காரர் எட்டுமணியானதும்
சட்டவிரோதக் குடியேற்றக்காரர். ஆனால்
சட்டபூர்வமாகப் பிணையில் செல்லலாம்.
சட்டபூர்வமாகப் பிணையில் செல்லலாம்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

நீரில், விமான நிலையத்தில் ஆவணமின்றி
யாரும் அகப்பட்டால் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்.
சட்டவிரோதக் குடியேற்றக்காரர் என்றால்
சட்டரீதியான பிணையும் இல்லை.
அகதிக் கோரிக்கைத்  தீர்ப்பு வரையில்
அவர் தடுப்பு  முகாமில்தான்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

சட்டபூர்வமாக நுழைந்தவர்கள்
சட்டவிரோதக் குடிகளாக மாறினும்
அகதிக்கோரிக்கைத் தீர்ப்பு வரையில்
அவர் பிணையில் வெளியில் செல்லலாம்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

நானோ சட்டபூர்வமாக நுழைந்தேன்.
நான் அடைக்கலம் கோரியதும் சட்டபூர்வமாகத்தான்.
எட்டு  மணி கடந்ததும் சட்டவிரோதக்குடியானேன்.
என்னைப்  பிணையில் விட்டிருக்க வேண்டும்.
ஆனால்
தவறாகச் சட்டவீரோதக் குடியாக
அடைக்கலம் கோரினேன் என்று கருதியதால்
அடைத்து வைத்தார் மூன்று மாதம்
அமெரிக்கத் தடுப்பு முகாமில்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறினேன்.  நான்
அடியேனின் தடுப்பு முகாம்
அனுபவங்களைக் கூறினேன்.

பின்னர் ஒரு தடவை
இன்னும் விரிவாக என்
தடுப்பு முகாம் அனுபவங்களை
எடுத்துரைப்பேன்.. நான் எடுத்துரைப்பேன்.


                                                      ஓவியம்  -   AI

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்