Monday, August 19, 2024

வ.ந.கிரிதரன் பாடல் : ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்!



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HSFigDG3ESU

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

மணியத்தின் ஆர்டிஸ்ட் மணியத்தின்
மக்கள் திலகத்தின் கட் அவுட்டுகள்
எம்மை மகிழ்வித்த காலமது.
எண்ணிப் பார்த்தால் மகிழ்வுதான்.

வாத்தியாரின் புதுப் படமென்றால்
வாண்டுகள் எங்களுக்கோ கொண்டாட்டம்தான்.
முதல் நாளிரவே காட்சி தொடங்கிவிடும்.
முண்டியடித்தபடி வாத்தியார் இரசிகர்கள்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.திரையரங்கின் முன் உயர்ந்து நிற்கும்
திகைப்பை ஊட்டும் எம்ஜிஆரின்
கட் அவுட்டுகள் கண்டாலே
களிப்பு நெஞ்சில் பொங்கும்.

ராணி திரையரங்கத்தின் முன்
அடிமைப் பெண் மாட்டுக்கார வேலன்
ராஜா திரையரங்கத்தின் முன்
காவல்காரன் நீரும் நெருப்பும்

கட் அவுட்டுகள் இன்றும்
கண்களில் தெரியும், களிப்பூட்டும்.
சிட்டுகளாகச் சிந்தனைக் குருவிகளைச்
சிறகடிக்க வைக்கும், நினைவூட்டும்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

மணியத்தின் கட் அவுட்டுகள்
மகிழ்ச்சியை எமக்குத் தந்தன.
எம் வாழ்க்கையில் அவை
என்றும்  பின்னிப் பிணைந்தவை.

காலக் கப்பல்கள் மணியத்தின்
கட் அவுட்டுகள் பற்றிய நினைவுகள்.
நினைவுகளில் ஏறி நாம்
நேற்று சென்றிட வைக்கும்
காலக் கப்பல்கள் மணியத்தின்
கட் அவுட்டுகள் பற்றிய நினைவுகள்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

பால்ய பதின்மப் பருவங்களில்
பேருவகை எமக்குத் தந்தவை
அகத்தில் நிலைத்து நிற்கும்
ஆனந்தத்தில் எமைக் குளிப்பாட்டும்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.


No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்