Friday, August 2, 2024

அறிஞர் அண்ணா! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


என் ஆளுமையில் அறிஞர் அண்ணாவுக்கும் முக்கிய பங்குண்டு. வெகுசனப் படைப்புகள் -> திராவிட முன்னேற்றக் கழக எழுத்துகள் -> மார்க்சியப் புரிதல் என என் ஆளுமை பரிணாமடைந்து வந்துள்ளது. 

பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் உரைகள் இளைஞர்களை ஆட்டிப் படைத்தன. தேடித் தேடி வாசித்தோம். இளைஞர்கள் நூலகங்களை அண்ணா அறிவகம் என்னும் பெயரில் ஆரம்பித்தார்கள்.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=4CQZe3j8eQI

அறிஞர் அண்ணா!  - வ.ந.கிரிதரன் -

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

'ஏ தாழ்ந்த தமிழகமே!
எம்மைப் பிரமிக்க வைத்தது.
எம்மைச் சிந்திக்க வைத்தது.
எங்கும் நிலவிக் கிடக்கும்
ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்தது.

'எதையும் தாங்கும்  இதயம் வேண்டும்'

'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.'

'ஒன்றே குலம். ஒருவனே தேவன்'

அண்ணாவின் மொழியை மாந்திக் கிடந்தோம்.
அதில் களிவெறி கொண்டு கிடந்தோம்.

சுயமரியாதை, சமநீதி, பகுத்தறிவு
உயர்வாய் இவற்றைக் கடைப்பிடித்தென
ஓங்காரம் இட்டவர் அறிஞர் அண்ணா.

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

பன்மொழிப் புலமை
பாமர மக்களுடன்
பேசும் பாங்கு
அறிந்தவர் அண்ணா.

எழுத்துகளால் எம்மைக் கவர்ந்தார்.

ஆற்றிய உரைகளில் எம்மை
அகப்படுத்தியவர் அறிஞர் அண்ணா.

அவர் ஆற்றும் அடுக்குமொழி உரைகள்
எவர் ஆற்றுவார் இம்மாநிலத்தில்.

பகுத்தறிவுக் காவலன்
பெரியாரின் சீடன்.
உதயத்தில் அஸ்தமனம்
இதயத்துப் பேரிடி.

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்