Saturday, August 17, 2024

வ.ந.கிரிதரன் பாடல்; எண்ணம் நிறைவேறும் -



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=BSXPVJWeLhE

வ.ந.கிரிதரன் பாடல்; எண்ணம் நிறைவேறும் -

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

உண்மை உறவு கலைவதில்லை.
உண்மை உறவு குலைவதில்லை.
உண்மை என்னை நம்பு. அன்பே!.
உண்மை என்னை நம்பு.

அன்பே.
அந்த நம்பிக்கையில் வாழ்கின்றேன்.
இந்தப் பிறப்பில் நீயே என் துணை.
எந்தப் பிறப்பிலும் நீயே துணை எனவே
சொந்தம் தொடரவே மனம் விரும்புகிறேன்.

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.

அன்பே.
பிரிவு நீங்கி உன்னைச் சேர்வேன்.
தெரிவை என் எண்ணம் நிறைவேறும்.
என் எண்ணம் உண்மையாயின் அன்பே
உன்னை நான் நிச்சயம் சேர்வேன்.

அன்பே.
உன் சொற்கள்
என் நெஞ்சின் சூட்டைத் தணித்தன,.
என் எண்ணமும் அதுவே.
நல்லது நடக்கும் அன்பே.
நல்லதையே நினைப்போம்.
அல்லவை தூர ஓடட்டும் அன்பே.
நல்லவை நாடி வரட்டும்.

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

எம் எண்ணம் நிறைவேறும். அன்பே!
நம் எண்ணம் நிறைவேறும்.
இனியவற்றை எண்ணுவோம். அன்பே.
இன்புற்றே இருந்திடுவோம்.



No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்