Thursday, August 22, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.


                                           - இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -


படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

யார் படைத்தார் பேரண்டமிதை.
பார்த்தால் பிரமிக்க வைக்கும்
பேரண்டத்தை யார் படைத்தார்?
யார் படைத்தார்? ஏன் படைத்தார்?

நுண்ணியதிலும் நுண்ணியதான குவாண்டம்
உருப்பெருக் காட்டிகள் இல்லையெனில்
உள்ளவற்றைப் -பார்க்க முடியாது.
உள்ளவற்றை உணர முடியாது.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

பெருந் தொலைவுகள் விரிந்திருக்கும்
பிரபஞ்சப் புதிர்களை அறிவதற்கு,
அருகில் உள்ளதுபோல் காட்டும்
தொலைக் காட்டிகள் தேவையாகும்.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

முப்பரிமாணம் தெரியும் உலகை
எப்பொழுதும் நாம் பார்க்கின்றோம்.
முப்பரிமாணங்கள் மீறி மேலும்
உலகுகள் உண்டோ நாமறியோம்.

பரிமாணங்கள் மீறிய உயிர்கள்,
மூலகங்கள் மாறிய உயிர்கள்,
விரிந்து கிடக்கும் பெருவெளியில்
ஒளிந்து கிடக்கின்றனவோ யாரறிவார்?

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.
படையெடுப்பர் சிந்தனைப் போர்வீரர்.
விடைநாடித் தேடும் நெஞ்சு.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்