Monday, August 26, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!


- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SWvb2fkyxa4

 மழை போல் பொழிவோம்!

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

வான்துளைத்து மின்னல் கோடிழுக்கும்.
பேரிடியோ பெருந்தொலைவு கேட்கும்.
நான் படுக்கையில் புரண்டிருப்பேன்.
நிலைமறந்து மெய்  மறப்பேன்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

வயற்புறத்தே தவளைகள் வாய்ப்பாட்டு
விடியும் வரையும் தொடர்ந்திருக்கும்.
வெள்ளம் பெருக்கோடி பாய்ந்திடும்.
வழியெங்கும் நிலங்கழுவிச் சென்றிடும்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

மழைவெள்ளம் சொல்லும் அறிவுரையாம்
நிலம் துடைக்குமதன் செயற்பாடு.
ஊருக்கும் நன்மை செய்யும்
மழைவெள்ளம் கண்டு களிப்பேன்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

பயிர் வளர்க்க மண்ணை
பதப்படுத்த மழை பெய்யும்.
உயிர் உலகில் இருப்பதற்கு
உதவப் பெய்வது மழையாகும்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

மழைபோல நாமும் பொழிவோம்.
மற்றவர்க்குப் பயன் தருவோம்.
இருப்புக்கு அர்த்தம் தரும்
பெருமை மிகு வாழ்வாகும்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்