Tuesday, August 13, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! -




- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI Hedra

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=WnVKQLym7BQ

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.

நட்சத்திரத் தோழியரே.
நட்சத்திரத் தோழியரே.
உலகு முழுவதும்
உங்களால் பார்க்க முடியும்.
முடிந்தால் தேடிப் பாருங்கள்.
மேற்கு நோக்கிச் சென்றவனை
முடிந்தால் தேடிப் பாருங்கள்.

இருப்பதே போதுமென்றேன்.
இங்கிருந்தே வாழ்வோமென்றேன்.
அங்கிருந்து உழைப்பது மேலென்றே
அவன் எனைப் பிரிந்தான்.
பிரிந்தவன் பிரிந்தவனே தோழியரே,
பிரிந்தவனிடமிருந்து இன்றுவரை
பதில் ஏதுமில்லை.
பதைபதைத்துக் கிடக்கின்றேன்.
தோழியரே,
பதைபதைத்துக் கிடக்கின்றேன்.
எங்கு சென்றான் அவன்.
என்ன ஆனான் அவன்.

நட்சத்திரத் தோழியரே.
நான் தவிப்பதை
நவிலுங்கள் அவனிடம்.
அவனில்லாத வாழ்வில்
இவளுக்கு இனிமையில்லை என்று
அவனுக்குச் சொல்லுங்கள்.

பொருள் தேடிப் போனவனைப்
பார்த்தால் பகருங்கள்.
பெண்ணிவளின் நிலையைப்
பகருங்கள்.

அவனருகில் நானிருந்தால்
அது போதும் என்று
அவனிடம் கூறுங்கள்.
அவசரமாக வரும்படி கூறுங்கள்.
நட்சத்திரத்  தோழியரே.
நட்சத்திரத்  தோழியரே.
நங்கை இவள் நிலையினை
எடுத்துக் கூறுங்கள்.
என்னிடம் இரக்கம் காட்ட
எடுத்துக் கூறுங்கள்.

அவனற்ற இருப்பில்
அழகில்லை. அமைதியில்லை.
இனிமையில்லை.
எதுவுமில்லை.
வெறுமை சூழ் வாழ்வென்று
வழியில் கண்டால் கூறுங்கள்.
நட்சத்திரத் தோழியரே. கூறுங்கள்.
நட்சத்திரத் தோழியரே.

இங்கு வயலுண்டு,.
இங்கு குளமுண்டு.
இங்கு வளம் உண்டு.,
இங்கு வனம் உண்டு.
இருப்புக்குப் பொருள் பெருக்க
இங்கு எல்லாம் உண்டு.
அவனிடம் கூறுங்கள். கூறி
அவனை அழைத்து வாருங்கள்.
அவன் அருகில் இருந்தால்
அது போதும்.
அது போதும்.
அது போதும்.



No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்