- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zrIMuysVSN0
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
ஆகாயம் பார்த்து நிற்கும் பொழுதுகள்
ஆகர்சிப்பவை என்னை எப்போதும் எப்போதும்.
விரிவெளியில் என்னிருப்பு எவ்விதம் இவ்விதம்?
விடைநாடி வினாக்கள் எழும் பொழுதுகள்.
தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
இருப்பு பற்றிய கேள்விகளில் விருப்புண்டு.
சிந்திக்கத் தூண்டும் வினாக்கள் அல்லவா.
சிந்திப்பதில்தான் எத்துணை மகிழ்ச்சி.களிப்பு.
தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
சிந்திப்பது மானுடரின் தனி உடமை.
பேரண்டத்தின் பெருவெளியில் இருக்கக் கூடும்
நம்மைப் போல் சிந்திக்கும் வேறினம்.
நம்புகின்றேன் நானிதை எப்பொழுதும் உறுதியுடன்.
தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
கற்றல், சிந்தித்தல், எழுதுதல் , வாசித்தல்போல்
களிதரும் வேறொன்றும் இல்லை எனக்கு.
காலம் கழிவதும் தெரிவது இல்லை.
நானிவற்றில் மூழ்கிக் கிடக்கும் பொழுதுகளில்.
குமிழிபோல் வெளியில் விரையும் ஒரு கோளில்
அந்தரத்தில் ஓரிருப்பு எவ்விதம் இவ்விதம்
அவதரித்தது என்பது வியப்பு. பெருவியப்பு.
அண்டத்தின் இரகசியங்களை யார்தான் அறிவரோ?
தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.
No comments:
Post a Comment