Thursday, August 29, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதல் செய்வீர்!


                                                    இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

 காதல் செய்வீர்!

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

ஆடி அசைந்து செல்லும் நதி.
அதுபோல்தான் வாழ்வில் காதல் நதியும்.
கூடி இன்பம் உயிர்கள் அடைய
காதல் நதியும் கரைபுரண்டு பாயும்.    

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

உடல்நலம் சீர்செய்யும் அரு மருந்து.
உளநலம் சீர்செய்யும் மருந்தே காதல்.
உளநலம் சீரடைந்தால் நலமாகும் உடலுமே.
உயிர்வாழ உதவிடும் மருந்தே காதல்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

பூங்காக்கள் பூக்கள் சிரிக்கும் சொர்க்கம்.
பூக்கள் பூக்கும், நறுமணம் பரப்பும்.
காதல் மலர்கள் பூக்கும் நந்தவனம்
ககனத்தில் மானுடர் எம் வாழ்வும்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

மழைத்துளி தீண்டின் மெய் சிலிர்க்கும்.
மகிழ்வால் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.
காதல் துளி  தீண்டின் சித்தம் சிலிர்க்கும்.
உண்மை அன்பில் தன்னலம் அருகும்..

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

காதல் செய்வீர் என்றான் மகாகவி.
காதல் மலர் கொய்வோம் நாம்.
காதல் மலர்கள் பூக்கும் பூங்காவென.
மாற்றிடுவோம் மண்ணுலகை நாம் எல்லோரும்.

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்