Friday, August 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: எண்ணிம நூலகம் 'நூலகம்'


 இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=mOxmNszsNuc

வ.ந.கிரிதரனின் பாடல்கள் அனைதையும் கேட்க - https://www.youtube.com/@girinav1

நூல்கள் இன்பமூட்டும் இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல. ஒரு காலகட்ட வரலாற்றை, பண்பாட்டை, மானுடச் சமூக வாழ்வை எடுத்துரைக்கும் வரலாற்று ஆவணங்களும் கூட. இன்று எண்ணிமப் பிரதிகளாக எழுத்துப் பிரதிகள் காலத்தின் சிதைவுகளுக்குள் சிதைந்து போகாது நிலைத்து நிற்கும் தொழில்  நுட்பம் இருக்கின்றது .எண்ணிம நூலகமான 'நூலகம்' எழுத்துப் பிரதிகளை அவை நூல்களாக இருக்கட்டும், பத்திரிகைகளாக இருக்கட்டும், பல்வேறு மலர்களாக இருக்கட்டும் சேகரிக்கும் அரிய பணியினைச் செய்து வருகின்றது.

என் பால்யப் பதின்ம வயதுப் படைப்புகள் பலவற்றை நூலகத்தின் சேகரிப்பிலிருந்து என்னால் மீண்டும் பெற முடிந்தது. நூலகத்தின் சேவையைப் பாராட்டுவோம். அதற்கு ஆதரவு நல்குவோம். நூற் பிரதிகளை வழங்குவோம், நிதியினையும் அள்ளிக் கொடுப்போம். நூலகம் தளத்தின் இணையத்தள முகவரி: https://noolaham.org

வ.ந.கிரிதரன் பாடல்: எண்ணிம நூலகம் 'நூலகம்'

'நூலகம்' எண்ணிம நூலகம்.
நூலகம் வரலாற்றுப் பெட்டகம்.

நூலகம் பிரதிகளைச் சேகரிக்கும்
நல்லதொரு திட்டம் என்போம்.
நல்ல திட்டத்தை ஆதரிப்போம்.
எல்லோருக்கும் எடுத்து உரைப்போம்.

புத்தகங்கள் வரலாற்று ஆவணங்கள்.
சித்தம் உயர்வுற வைக்கும்.
இத்தரையில் எம் வரலாற்றை
சத்தமிட்டு எடுத்துரைக்கும் ஆவணங்கள்.

எத்தனை வருடங்கள் கடப்பினும்
புத்தகங்கள் நிலைத்து நிற்கும்
மண்ணில் சரித்திரச் சின்னங்களாக,
எண்ணிமப் பிரதிகளாக என்றும்.

'நூலகம்' எண்ணிம நூலகம்.
நூலகம் வரலாற்றுப் பெட்டகம்.

ஓலைச் சுவடிகளைப்  பாதுகாத்தோம்.
ஓலைகளைக் கறையான்களும் தின்றன.
ஓலைகளைக் காலமும் சிதைத்தது.
ஓலைச் சுவடிகள் இன்றும்
ஒருகால கட்டச் சின்னங்கள்.
ஓம். வரலாற்றுச் சின்னங்கள்.

புத்தகங்கள் சரித்திரச் சின்னங்கள்.
புத்தகங்கள் இலக்கிய ஊற்றுகள்.
புத்தகங்கள் அறிவை வளர்க்கும்.
புத்தகங்கள் வாழ்வை உயர்த்தும்.

நூலகம் பிரதிகளைச் சேகரிக்கும்
நல்லதோர் திட்டம் என்போம்.
நிதி கொடுத்து  உதவுவோம்.
நூற் பிரதிகளை வழங்குவோம்.

'நூலகம்' எண்ணிம நூலகம்.
நூலகம் வரலாற்றுப் பெட்டகம்.
நூலகம் பிரதிகளைச் சேகரிக்கும்
நல்லதொரு திட்டம் என்போம்.

'நூலகம்' எண்ணிம நூலகம்.
நூலகம் வரலாற்றுப் பெட்டகம்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்