Friday, August 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=L4gHGEj649U

யாழ் மண். பிரியம் மிகு
யாழ் மண்ணே.
உணர்வுடன் கலந்த யாழ் மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

நான் பிறந்த மண் நீ.
நான் தவழ்ந்த மண்.
நான் உருண்டு , புரண்ட மண் நீ.
நான் எழுந்த மண் நீ.
நான் இளமைக்கனவு கண்ட மண் நீ.
என் இனிய யாழ் மண்ணே!
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை எம் வரலாற்றின் சாட்சி நீ.
எம் வரலாற்றில் நீ சந்தித்த
களங்கள், போர்க்களங்கள் எத்தனை.
தாழ்ந்த போதெல்லாம் மீண்டும் நீ
மேலெழுந்தாய்.
மேலெழுந்து நிலைத்து நின்றாய்.

எரிக்கப் பட்ட போதெல்லாம்
எழுந்து நின்றாய்.
உறுதியுடன் உயர்ந்து நின்றாய்.
உத்வேகம் தந்தாய்.

இளம் பருவத்தில்
உளம் மகிழ்ந்து திரிந்தேன்
யாழ் மண் மீது.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

பண்ணைக் கடற்கரை,
புல்லுக்குளம்,
பொதுசன நூலகம்
முற்றவெளி,
மணிக்கூட்டுக் கோபுரம்

காட்சிகள் விரியும்
கண் முன்னே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

முற்றவெளித் தேர்தல் கூட்டங்கள்
மக்கள் திரண்ட தேர்தல் கூட்டங்கள்.

தானைத்தலைவர் அமிர்,  அவர்
தாங்கிப் பிடிக்கும் தந்தை செல்வா
இரத்தப் பொட்டிடும் இளவல்கள்

மனத்தில் மறக்க முடியாக் காட்சிகள்.
நினைத்துப் பார்க்கின்றேன்.
மண்ணே! யாழ் மண்ணே!
எப்படி மறப்பேன் உன்னை.
எப்படி மறப்பேன் உன்னை.

நகரில் திரிந்த பொழுதுகள்
நகரில் களித்த திரையரங்குகள்
நகரில் சுகித்த உணவகங்கள்
நகரில் அருந்திய பானங்கள்

றிக்கோ, சுபாஷ், பிளவுஸ்
லிங்கம் கூல் பார்
மொக்கங், ஆசாத் கபே
எப்படி
மறப்பேன் உன்னை.
எப்படி
மறப்பேன் உன்னை.

யாழ்ப்பாணம் என்றால்
யாழ்தேவி நினைவு வரும்.
யாழ்ப்பாணம் என்றால்
யாழ் கூழ் நினைவு வரும்.
கிடுகு வேலி நினைவு வரும்.
கிட்டிப்புள் நினைவு வரும்.
காற்றில் தலைவிரிக்கும் பனை,
கமுகு ,தென்னை நினைவு வரும்.
சுற்றம் கூவி அழைக்கும் ஊரின்
உற்ற நட்புக்காகம் நினைவு வரும்.

என் பிரிய யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை.
எப்படி மறப்பேன் உன்னை.

யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.



No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்