Thursday, August 8, 2024

தரணித் தடாகத்தில் அன்புத்தாமரை பூக்கட்டும். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்; AI SUNO -

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=UeafkwtXu6Q

மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

மதம்! மொழி! இனம்! நிறம்!,
மதிப்போம் அவரவர் போக்கை. ஆனால்
மானுடரே. வேண்டாம் பிரிவினைகள்.
மானுடரே வேண்டாம் மோதல்கள்.

ஐந்து விரல்கள் நமக்கு.
அனைத்தும் அளவில் ஒன்றல்ல.
ஐந்தும் சேர்ந்தாலே பயன்.
அல்லாவிடில் பயன் என்ன?


மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

அனைவரும் இணைவதால் விளைவது
ஆக்கமே. ஆரோக்கியம் மிக்கது.
அனைவரும் இணைவோம். செயற்படுவோம்.
ஆக்கம் விளைவிப்போம். பயனடைவோம்.

தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால்
ஆக்கத்தை உருவாக்க வேண்டுமென்றால்
தாக்குதல்களை நிறுத்துவோம். தலை நிமிர்வோம்.
தரணித் தடாகத்தில் அன்புத்தாமரை பூக்கட்டும்.

மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.



No comments:

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)

துதிபாடல், துதி நாடலால் துவண்டு கிடக்கிறது உலகு. இருப்பின் தன்மை தெரிந்தால் இதற்கொரு தேவை உண்டா? இல்லை என்பதை உணரார் இவர். பாதிப்பின் உணர்வு...

பிரபலமான பதிவுகள்