Monday, August 12, 2024

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன்


 
                                                  ஓசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=w9bSBvRq-Zk

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன்

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்திருக்கும் விண் எனக்கு
விளக்கும் ஓர் ஆசான்.
இருப்பை விளக்கும் ஆசான்.
இங்குதான் சிந்தனைகள் விரிவடையும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்து செல்லும் விண்ணுக்கு
எங்குண்டு ஒரு முடிவு?
அன்றொரு நாள் பெருவெடிப்பில்
இன்றுள்ள விண் தோன்றியதாம்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

சுடர்கள், கோள்கள், எரியும்
சுடர்கள், கருமைத் துளைகள்
நீண்டவால் தூம கேதுக்கள்
அண்டக் குழுக்களும் உண்டாம்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

அருகில் உள்ள சுடர்
அடைவதற்கே ஒளியாண்டுகள் நான்கு.
ஒளிவேகத்தின் சிறுதுளி நம்வேகம்.
வழியுண்டா விரைவில் செல்வதற்கு/

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ/ இம்
மண்ணில் உண்டோ?

விண்ணைப் பார்க்கையில் எனக்கு
மண்ணில்நம் இருப்பு பற்றிய
வினாக்கள் எழும் அலைஅலையென.
விடைகள் அற்ற வினாக்கள்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

எண்ணங்களை விரிவடைய வைக்கும்
விண்ணைப் போன்ற பெட்டகம்
அறிவுப் பெட்டகம் உண்டோ.
அறிவுப் பெட்டகம் உண்டோ?

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

இருப்பின் உண்மைகளை வைத்திருக்கும்
அறிவுப் பெட்டகம் விண்ணே.
காலவெளிப் பின்னலே விரிவிண்.
ஆம்.
காலவெளிப் பின்னலே விரிவிண்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்