Sunday, August 25, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - வாழ்க்கை எனும் சதுரங்கம்!

 


- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

வாழ்க்கை எனும் சதுரங்கம்!

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

சதுரங்கம் என்பதொரு போர்க்களமே.
அதுபோல் வாழ்வுமொரு போர்க்களமே.
போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கே
பொறுமை மிகவும் அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

பொறுத்தார்  பூமி ஆள்வார்.
போர்க்களத்தில் பொறுத்தார் வெற்றியடைவார்.
சதுரங்கத்தில் சாதனை படைப்பார்.
எதுவந்தபோதும் எழுந்து வெல்வர்.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

வாழ்க்கையை விளையாடி வெல்வோம்.
வெல்வதும், தோற்பதும் இயல்பே.
சதுரங்க வாழ்விலும் சகஜமே.
எதுவந்த போதும் வென்றிடுவோம்.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.



No comments:

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்