Wednesday, August 28, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இணைந்து வாழ்வோம்.



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=TZNTRdlr6_M

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

மல்லிகை, முல்லை, தாமரை என
மலர்கள் இருப்பது மகிழ்வினைத் தரும்.
மா, முதிரை, பாலை என
மரங்கள் இருப்பதும் பயனைத்  தரும்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.மனிதர் பலர் வாழும் பூமி.
மனிதரின் ஒற்றுமை பூமியின் ஒற்றுமை.,
வேற்றுமையில் ஒற்றுமை நன்மை தரும்.
ஒற்றுமையாய் இருப்போம். வாழ்ந்து சிறப்போம்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

இனம், மதம், மொழி என
இருப்பதால் இங்கு நன்மையே உண்டு.
பல்லினம் இணைந்து பயணிப்பதால் உலகம்
பெருநன்மை அடையும். முன்னேற்றம் அடையும்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

பிறப்பின் நியதி ஒற்றுமையின் நியதி.
சிறப்புற்று வாழ ஒற்றுமை கொள்வோம்.
இருக்கும் வரையில் இணைந்து வாழ்வோம்.
இருக்கும் இடர் நீக்கி வாழ்வோம்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.



No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்