Tuesday, August 13, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா..



 இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI Hedra

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=-WpB3D_9evI



நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

தறி கெட்டலையும் ஆழ்மனக் குதிரை.
தறி கெட்டலையும் குதிரையை
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.ஆழ் மனக்குதிரையை அடக்க முயன்றால்
அது அடங்க மறுக்கும்,. முரண்டு பிடிக்கும்.
எது நீ செய்து அடக்க நினைத்தாலும்
அது எதிர்த்து நிற்கும். முரண்டு பிடிக்கும்.

நான் எண்ணங்களை நம்புபவன்.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

ஆழ் மனக்குதிரையை அடக்குவாய் நண்பா.
அதன் மேல் ஏறி சவாரி செய் நண்பா.
அதன் பின் உன் வாழ்வில் வெற்றிமழைதான்.
ஆம். வெற்றி மழையே. வாகை சூடுவாய் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

முரண்டு பிடிக்கும் மனக்குதிரையை அடக்குவது
எப்படி என்றா கேட்கின்றாய் நண்பா.
எப்படி என்று எடுத்துக் கூறுவேன் நண்பா.
எப்படி என்று எடுத்துக் கூறுவேன் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்..
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

மீண்டும் மீண்டும் ஒன்றைக் கூறினால்
மறுபடியும் மறுபடியும் அதை எடுத்துரைத்தால்
அது ஆழ் மனத்தில்  நிலையாகப்  படியும்.
அது ஆழ் மனத்தில் சென்று படியும்.

அமைதியான காலை நேரம் அல்லது
அந்தியின் பேரழகில் மெய்ம்மறந்து கிடக்கும் நேரம்
அல்லது படுக்கையில் கண் அயரும் தருணம்
அப்படி மீண்டும் மீண்டும் எடுத்துரை நண்பா.

அப்படி எடுத்துரைத்தால் உன் எண்ணம்
ஆழ்மனத்தில் சென்று படியும் நண்பா.
ஆழ்மனக்குதிரையை அடக்கும். வெல்லும்.
ஆழ்மனக்குதிரையை அடக்கும்., வெல்லும்.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

ஆழ் மனக்குதிரையை அடக்குவாய் நண்பா.
அதன் மேல் ஏறி சவாரி செய் நண்பா.
அதன் பின் உன் வாழ்வில் வெற்றிமழைதான்.
ஆம். வெற்றி மழையே. வாகை சூடுவாய் நண்பா.

ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா.
ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா.
அதுவே வெற்றியின் திறவுகோல் நண்பா.
அதுவே வெற்றியின் திறவுகோல் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்