- இக்கவிதையை முழுமையாகக் கேளுங்கள். ,முடிவில் இருக்கிறது திருப்பம். இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.
இசை & குரல்; AI SUNO.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cFKIwGvnUM0
என் மோகம் தீர்க்க மாட்டாயா அன்பே! - வ.ந.கிரிதரன் -
நம்ப முடியாத உலகமிது. எதையும்
நம்ப முடியாத உலகமிது.
அன்பே!
உன்னைப் பார்த்ததுமே
உன் மேல் மையலுற்றேன்.
உன் கண்கள்,
உன் உதடுகள்,
உன் புன்னகை
என்னைக் கிறங்க வைத்தன.
உன் மேல் மோகம் கொண்டேன்.
நான்
உன் மேல் மோகம் கொண்டேன்.
நான் எதிர்பார்த்த பேரழகின் பொக்கிசம் நீ
என்றெண்ணினேன்.
உன்னுடன் நட்பு கொள்ள விரும்பினேன்.
இவ்வளவு காலமும் எங்கிருந்தாய் நீ
அவ்வளவு தூரம் பிடித்திருந்தது எனக்கு.
அன்பே உன்
வனப்பு.
அன்பே!
உன்னைப் பார்த்தாலும்
உன்மேல் மையலுற்றாலும்
உன்னை நான் மோகித்தாலும்
என்னால் உன்னை அடைய முடியாது.
என்னால் உன்னை அடைய முடியாது.
அதற்கு நான் கொடுத்து வைத்தவனல்லன்.
அன்பே. கொடுத்து வைத்தவனல்லன்.



