Monday, September 9, 2024

வ.ந.கிரிதரன் பாடல்; வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

சுழல்கள் நிறைந்த பேராறு வாழ்க்கை.
உழலும் நெஞ்சில் உறுதியாக நிற்பேன்.
குலைந்து போவதால் என்ன பயன்?
அலைக்கழிந்து வீழ்வதால் நன்மை என்ன?

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

இருக்கும் வரையில் இன்பம் உறுவோம்.
பெருந்தடை எதிர்பட்டால் எதிர் கொள்வோம்.
ஓரமாக ஒதுங்கிப் போக மாட்டேன்.
எதிர்கொள்வேன். எதிர்நீச்சல் போட்டுச் செல்வேன்.

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

Sunday, September 8, 2024

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்: எழுத்தாளர் அரங்கம் (25) - எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அனுபவங்கள்!


கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய எழுத்தாளர் அரங்கம் நிகழ்வில் கடந்த வெள்ளி கலந்துகொண்டு உரையாற்றினேன்.


அதில் என் எழுத்துலக அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்துகொண்டேன். எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை அறிவதில் பெரு விருப்பு மிக்க எனக்கு என் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் முக்கியமான அனுபவம்.

நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை, கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு நீங்கள் கேட்கலாம்.
கேட்டுப்பாருங்கள். என் எழுத்துலக ஆர்வத்தினை, வாசிப்பிலுள்ள பெரு விருப்பினை, என் எழுத்துலகக் காலகட்டங்களை, என் சிந்தனைகளை எனப் பலவற்றை இங்கு நீங்கள் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=380_YhEKI9s

இணையகக் காப்பகத்தில் (archive.org) ' வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!


வ.ந.கிரிதரன் பாடல்கள்!

தற்போது இணையகக் காப்பகத்தில் (archive.org) 'வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!' ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாசிக்க விரும்பும் எவரும் வாசிக்கலாம். பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுடருக்கு ஆரோக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றது. செயற்கை அறிவும் அத்தகைய தொழில் நுட்பமே. எனது பாடல் வரிகளுக்குச் செயற்கைத் தொழில் நுட்பம் இசையமைத்ததுடன் அல்லாது பாடுவதற்கான குரலையும் வழங்குகின்றது.  பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல் வரிகளைப் பல் வகைகளில் இசையமைத்து, பாட வைத்துப் பரிசோதிக்க இத்தொழில் நுட்பம் வழி சமைத்துள்ளது. அவரது பாடல் எழுதும் திறமையினையும் வளர்ப்பதற்கும் இத்தொழில் நுட்பம் உதவுகின்றது.

இவ்விதமாகச் செயற்கை அறிவு இசைமையத்துப் பாடிய பாடல்களை நீங்கள் எனது யு டியூப் சானலான வ.ந.கிரிதரனின் பாடல்கள் சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1  அட்டைப்பட ஓவியம்: செயற்கை அறிவு (AI) | இசை & குரல்: செயற்கை அறிவு (AI) SUNO.

Thursday, September 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன் சிறகடிப்பில் உள்ளது
உன் படைப்பின் மகத்துவம்.
பறத்தல் என்பது  சுலபமல்ல.
பறத்தல் என்பது தொழில்நுட்பம்.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

Wednesday, September 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பின் சிறப்பு!



இசை & குரல் : AI SUNO | ஓவியம்; AI


படைப்பின் சிறப்பு!


இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

படைப்பில் குறைகள் பல.
படைத்தவரின் மென்பொருள் வழுக்கள்.
அடிப்படையில் உயிர்கள் அனைத்தும்
உருவாவது வடிவிலொத்த உயிரணுக்களில்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

வ.ந.கிரிதரன் பாடல்: சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

இருப்பில் சில தருணங்களைப் பற்றிய நினைவுகள் சிந்தையை விட்டு நீங்குவதேயில்லை. இத்தருணமும் அத்தகையதே. கறுப்பு ஜூலையில் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில் அருகில் என்னருகே சிறகடிக்கிறது சிட்டு ஒன்று. அப்பொழுது நான் நினைத்தேன் 'சிட்டுக்குரிய சுதந்திரம் கூட இந்நாட்டுக் குடிமகனாகிய எனக்கு இல்லை.' அத்தருணமும் , நினைப்பும் நிரந்தரமாகவே என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இவ்வனுபவம் பற்றி எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்துள்ளேன்.

சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

அத்தகைய தருணங்களில் ஒன்றே இத்தருணம்.
இத்தகைய தருணங்கள் வலியைத் தருபவை.
நினைத்துப் பார்க்கின்றேன் மீண்டும் ஒருதடவை.
நேற்றுத்தான் போலின்னும் நினைவில் தெரிகிறது.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

கறுப்பு ஜூலையில் தப்ப ஓடுகையில்
கண்ணில் தெரிகிறது அந்தச் சிட்டு.
ஓடும் என்னருகில் சிறகடிக்கும் சிட்டு.
விட்டு  விடுதலையாகிச் சிறகடிக்கும் சிட்டு.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை

Tuesday, September 3, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: வெகுசன இலக்கியத்தின் தேவை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

பாலர் பருவத்தில் பாலர் இலக்கியம்.
படிப்பது வளர்ச்சியின் தேவை அல்லவா.
அதன்பின் அம்புலிமாமாக கதைகள் படித்தோம்.
அதன்பின் வெகுசனப் படைப்புகளில் மூழ்கினோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

தீவிர வாசிப்பு நோக்கிய பயணத்தில்
தவிர்க்க முடியாதது வெகுசன இலக்கியம்.
கல்கி, அகிலன், சாண்டியல்யன், ஜெகசிற்பியன்
இவர்களின் படைப்புகள் எம்மை மகிழ்வித்தன.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...