Tuesday, September 3, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: வெகுசன இலக்கியத்தின் தேவை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

பாலர் பருவத்தில் பாலர் இலக்கியம்.
படிப்பது வளர்ச்சியின் தேவை அல்லவா.
அதன்பின் அம்புலிமாமாக கதைகள் படித்தோம்.
அதன்பின் வெகுசனப் படைப்புகளில் மூழ்கினோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

தீவிர வாசிப்பு நோக்கிய பயணத்தில்
தவிர்க்க முடியாதது வெகுசன இலக்கியம்.
கல்கி, அகிலன், சாண்டியல்யன், ஜெகசிற்பியன்
இவர்களின் படைப்புகள் எம்மை மகிழ்வித்தன.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் இலக்கியம்.
வாசிப்பின் வளர்ச்சியை வளர்க்கும் இலக்கியம்.
வாசிப்பவர் எவரும் தவிர்த்திடா இலக்கியம்.
வெகுசன இலக்கியம் என்றே கூறுவோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

உணர்வைத்  தூண்டி வழிமாற்றும் இலக்கியம்
எதுவென்றாலும் அது இலக்கியம் அல்ல.
உணர்வைத்  தட்டி எழுப்புவதே இலக்கியம்
உள்ளத்தின் வளர்ச்சிக்கு உதவுவதே இலக்கியம்.


No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்