Friday, September 27, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.



இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI

 புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

நாடு முன்னேற ஒற்றுமை அவசியம்.
பாடு படுவோம் ஒற்றுமை பேண.
பிரிந்து கிடந்தது இனியும் வேண்டாம்.
புரிந்து கொண்டே பயணத்தைத்  தொடர்வோம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

இனவாதம் வேண்டாம் மதவாதம் வேண்டாம்.
இருக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
கடந்தவை பாடங்களாக இருக்கட்டும். படிப்போம்.
நடப்பவை நல்லதாகத் தொடரவே நினைப்போம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

வறுமையில் மக்கள் வாழும் நிலையினை
அறுத்து எறிவோம். திட்டங்கள் தீட்டுவோம்.
அறிவை  அனைவரும் பெறவே நாம்
அனைவரும் உழைப்போம். உறுதி எடுப்போம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.








No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்