Thursday, September 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன் சிறகடிப்பில் உள்ளது
உன் படைப்பின் மகத்துவம்.
பறத்தல் என்பது  சுலபமல்ல.
பறத்தல் என்பது தொழில்நுட்பம்.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

காற்றற்ற வெளியில் பறத்தல்
குறுஞ்சிட்டே உன்னால் முடியாது.
காற்றை வைத்தார் வெளியே..
கடுகிப் பறக்க வைத்தார் அதனூடே.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

சிறகினூடு விரையும் காற்று.
சிறகடித்துப் பறக்க வைக்கும்.
கிறங்க வைத்துப் பறக்கின்றாய்.
கூறுகின்றாய் இருப்பின் புதிரினை.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன்னுடலும் உனது செயலும்
சின்னஞ்சிறு சிட்டே இருப்பின்
புதிர் அவிழ்க்கும் கூறு.
பெருஞான வெளிப் பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

No comments:

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!

எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல். இலங்க...

பிரபலமான பதிவுகள்