Wednesday, September 11, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதலை உணர வைத்தாய்!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க : https://www.youtube.com/watch?v=PUWeFIBBsek

காதலை உணர வைத்தாய்!  

 ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

பார்வையில் எவ்விதம் இவ்வித உணர்வுகள்
படம் விரித்தன. படைப்பின் அற்புதமே.
நெஞ்சின் ஆழத்தே சென்று உறைகின்றன.
வஞ்சியுன் வருகையால் இதை உணர்ந்தேன்.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

பொழுதெல்லாம் உனது நினைவால் நிறைந்தது.
எழுந்தால் , விழுந்தால் உன் நினைவே.
ஆழ உழுதாய் நெஞ்ச வயலை
ஆளுமையால் என்னைத் துடிக்க வைத்தாய்.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

காதலெனும் உணர்வினை உணர வைத்தாய்.
ஆதலினால் அன்பே இதயத்தில் குடியேறினாய்.
தனக்கென்று வாழா உள்ளம் உணர்த்தினாய்.
எனக்கிது போதும் என்பேன் அன்பே.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்