Monday, September 23, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI

உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர்  வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மை வரலாற்றை அறியாது இருக்கின்றோம்.
மண்ணின் வரலாற்றை எழுதுபவர் மக்களே.
உண்மை வரலாறு அதுவே உணர்வோம்.
உணர்ந்து அவரை எப்போதும் போற்றுவோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் சக்திகள் உறவே இங்கு
உண்மை வரலாற்றை உருவாக்கி வைக்கும்.
மானுட சமுதாய அமைப்புகளை உருவாக்கும்.
மாடாய், உழைப்பவரே வரலாற்றைத் தீர்மானிப்பர்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உண்மைதனை நாம் அறிவது அவசியம்.
உணர்ந்து உழைப்பவரை நாம் போற்றுவோம்.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்