Wednesday, September 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: ஏணி பாம்பு விளையாட்டு



இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

ஏணி பாம்பு விளையாட்டு

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

ஏறுவதும் இறங்குவதும் மீண்டும் ஏறுவதும்
எல்லாமே சகஜம் நம்வாழ்விலும் புரிந்துகொள்.
ஏறினால் பெருமிதத்தில் ஆழ்ந்து விடாதே.
இறங்கினால் இடிந்துபோய் இருந்து விடாதே.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?


ஏற்றமும் இறக்கமும் முரண்பாடுகள் தெரியுமா?
மூச்சிழுத்தலும், வெளியேற்றலும் முரண்பாடுகள் புரியுமா?
முரண்பாடுகள் அற்ற வாழ்வென்று ஒன்றில்லை.
முரண்பாடுகளே இருப்பின் அடிப்படை என்றறிவாய்.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

இன்பமும், துன்பமும் இல்லா வாழ்வில்லை.
உறவும் , பிரிவும் இல்லாக் காதலுண்டா?
ஊடலும் ,கூடலும் அற்ற குடும்பம் ஏது?
பிறப்பும், இறப்பும் இவையும் அதுபோல்தான்.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

முரண்பாடுகள் நியதி என்பதை ஏற்போம்.
முரண்பாடற்ற வாழ்வு இல்லை அறிவோம்.
முரண்களுக்குள் இணக்கம் காண்பது சரியாகும்.
முரண்களுடன் வாழ்வை ஏற்றுச் செல்வோம்.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?






No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்