Wednesday, September 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

இருப்பில் சில தருணங்களைப் பற்றிய நினைவுகள் சிந்தையை விட்டு நீங்குவதேயில்லை. இத்தருணமும் அத்தகையதே. கறுப்பு ஜூலையில் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில் அருகில் என்னருகே சிறகடிக்கிறது சிட்டு ஒன்று. அப்பொழுது நான் நினைத்தேன் 'சிட்டுக்குரிய சுதந்திரம் கூட இந்நாட்டுக் குடிமகனாகிய எனக்கு இல்லை.' அத்தருணமும் , நினைப்பும் நிரந்தரமாகவே என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இவ்வனுபவம் பற்றி எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்துள்ளேன்.

சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

அத்தகைய தருணங்களில் ஒன்றே இத்தருணம்.
இத்தகைய தருணங்கள் வலியைத் தருபவை.
நினைத்துப் பார்க்கின்றேன் மீண்டும் ஒருதடவை.
நேற்றுத்தான் போலின்னும் நினைவில் தெரிகிறது.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

கறுப்பு ஜூலையில் தப்ப ஓடுகையில்
கண்ணில் தெரிகிறது அந்தச் சிட்டு.
ஓடும் என்னருகில் சிறகடிக்கும் சிட்டு.
விட்டு  விடுதலையாகிச் சிறகடிக்கும் சிட்டு.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லைஉயிர் தப்ப ஓடும் மக்கள்
ஒன்றுமே அறியாது களிப்பில் சிட்டு.
அத்தருணத்தில் நினைத்தது நினைவில் உள்ளது.
'சிட்டுக்கு இருக்கும் சுதந்திரமற்ற நான்'

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை

அத்தருணமும் அத்தகைய தருணங்களில் ஒன்றே.
எத்தனை காலம் சென்றாலும் சிதையாது.
சிந்தையில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.
அன்று  உணர்ந்த அந்தத் தருணமும்.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை


No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்