Monday, September 2, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: அலைந்து திரியும் அகதி மேகமே!


இசை & குரல்:  AI SUNO | ஓவியம்: AI -


அலைந்து திரியும் அகதி மேகமே!

நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

நாடு விடு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

போரில் நீயும் குடும்பம் இழந்தாயோ?
இருந்த வீடும் இடிந்து போனதுவோ?
படையினர் உன் வீட்டை அபகரித்தனரோ?
புகலிடம் நாடி புலம் பெயர்ந்தாயோ?

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

அலைந்து திரியும் அகதி மேகமே.
அகத்தில் ஒருபோதும் நம்பிக்கை இழந்திடாதே.
நிலைகுலைந்து உன்வாழ்வு குலைந்திட விட்டிடாதே.
நிலைமாறும் என்னும் நம்பிக்கையை இழந்திடாதே.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

வரலாற்றில் நீதி அழிவதும் இல்லை.
அநீதி நிலைத்து நிற்பதும் இல்லை.
அதர்மம் அழிவது எப்போதும் நிச்சயம்.
தர்மம் வெல்வதும் அதுபோல் சத்தியம்.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

No comments:

கலைஞர் மு.கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி'

உண்மையைக் கூறப்போனால் என் பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', 'பார்வதி பி.ஏ", 'ஏ தாழ்ந்த தமிழகமே' ...

பிரபலமான பதிவுகள்