Monday, September 2, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: ஓயும் வரையில் ஓய்வில்லை



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

ஓயும் வரையில் ஓய்வில்லை

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

இரவும் பொழுதும் நாளும் வருடமும்
இரவி ஓய்வு எடுப்பது உண்டா?
இரவில் தண்ணொளி சொரியும் நிலவு
உறக்கத்தில் கண்ணயர்வது இல்லை அல்லவா.

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.உடல்நிலை நலமாக உள்ள வரையில்
உயிர்கள் ஓய்வு எடுப்பது இல்லை.
உறக்கம் என்பது ஓய்வு அல்ல.
உயிர் வாழ்வின் ஒருபகுதி அது.

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

பணியில் ஓய்வு பெற்றால் மூலையில்
போய் ஒதுங்கிக் கிடக்காதீர் ஒருபோதும்.
பிடித்த எதனையும் தொடர்ந்து செய்யுங்கள்.
பொன்னாக நேரத்தை மாற்றி வாழுங்கள்.

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

ஓய்வென்னும் சொல்லுக்கு ஓய்வு தேவை.
ஓய்வதில்லை இருப்பு உள்ள வரையில்.
சாயும் வரையில் செயல்கள் செய்வோம்.
செயல்கள் மூலம் சகத்தை உயர்த்துவோம்.

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.



No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்