Monday, September 9, 2024

வ.ந.கிரிதரன் பாடல்; வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

சுழல்கள் நிறைந்த பேராறு வாழ்க்கை.
உழலும் நெஞ்சில் உறுதியாக நிற்பேன்.
குலைந்து போவதால் என்ன பயன்?
அலைக்கழிந்து வீழ்வதால் நன்மை என்ன?

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

இருக்கும் வரையில் இன்பம் உறுவோம்.
பெருந்தடை எதிர்பட்டால் எதிர் கொள்வோம்.
ஓரமாக ஒதுங்கிப் போக மாட்டேன்.
எதிர்கொள்வேன். எதிர்நீச்சல் போட்டுச் செல்வேன்.

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.
எம் இருப்பென்பது இங்கு ஒருவாழ்வு.
நம் இருப்பில் நன்மை உணர்வோம்.
கானல்கள் கண்டு கலங்குதல் இல்லை.
கானல் உணர்ந்து நடந்து செல்வேன்.

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

தளராத முயற்சி ஒன்றே அவசியம்.
வளர்ச்சிக்கு அதுவே திடமான அத்திவாரம்.
உளத்தில் இவ்வுண்மை உணர்ந்து செல்வேன்.
வளம்மிகு காலம் வரவேற்கும் நிச்சயம்.

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.


No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்