Tuesday, September 10, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நோக்கமென்னும் கலங்கரை விளக்கு!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI -

நோக்கமென்னும் கலங்கரை விளக்கு!

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

கலங்கரை விளக்கு வழியைக் காட்டும்.
வாழ்க்கைக் கடலில் வழியைக் காட்டும்
நோக்கம் என்னும் கலங்கரை விளக்கே.
நினைவில் வைப்போம். பயணம் தொடர்வோம்.

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

நோக்கம் என்று ஒன்று  இருப்பின்
ஊக்கம் கொண்டு வழியைத் தொடர்வோம்.
கலங்கரை விளக்கு இல்லை என்றால்
கடலில் பயணம் திசை மாறும்..

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

திக்குகள் அற்றுப் பயணம் தொடரும்.
நோக்கம் அற்ற வாழ்க்கைக் கடலில்.
ஆக்கம் மிகுந்த வாழ்க்கை வாழ
நோக்கம் நிச்சயம் இருக்க வேண்டும்.

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

நோக்கம் ஒன்றை நினைவில் வைத்தே
நமது பயணத்தைத் தொடர்வோம்., தொடர்ந்தால்
நமது வாழ்க்கையில் அர்த்தம் பிறக்கும்.
நானிலம் ஆக்கத்தில் பூத்துக் குலுங்கும்.

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்