Wednesday, September 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பின் சிறப்பு!



இசை & குரல் : AI SUNO | ஓவியம்; AI


படைப்பின் சிறப்பு!


இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

படைப்பில் குறைகள் பல.
படைத்தவரின் மென்பொருள் வழுக்கள்.
அடிப்படையில் உயிர்கள் அனைத்தும்
உருவாவது வடிவிலொத்த உயிரணுக்களில்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

சின்விதை தளைக்கும் விழுதுவிடும்
பெருஆல் விருட்சமென புவியில்.
உயிர்கள் நிறைந்து கிடக்கும்.
பிரமிக்க வைக்கும் இவ்வுலகம்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

அந்தரத்தில் புட்களின் வாழ்க்கை.
எந்தக் கணத்திலும் அழியலாம்.
இருந்தும் தப்பிப் பிழைக்கும்
உயிர்கள் படைப்பின் திறனல்லவா?

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

சுற்றியிருக்கும் உலகை அறிவோம்.
சுற்றியிருக்கும் காலவெளி புரிவோம்.
கற்பதால் தெளிவு காண்போம்.
அற்புதமே இருப்பென வியப்போம்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்