Saturday, September 28, 2024

அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி....



ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார் திசாநாயக்க பற்றிச் சுருக்கமான ஆனால் முக்கியத்துவம் மிக்க கட்டுரையொன்றினை 'அநுரா குமார திசாநாயக்க; “இடதுசாரி” நட்சத்திரம் இலங்கையில் உதயம்' என்னும் தலைப்பில் டெய்லி மிரர் (இலங்கை) பத்திரிகையில் எழுதியுள்ளார். அதிலவர் அநுரா குமார திசாநாயக்கவின் வாசிப்பு மற்றும் நீச்சல் பழக்கம் பற்றியும் விபரித்துள்ளார். அவற்றின்  மூலம் அநுரா எவ்விதமான நூல்களை வாசிப்பார், எத்தகைய தேகப்பயிற்சி அவருக்குப் பிடித்தது போன்ற விடயங்களை அறிய முடிகின்றது.

அநுரா தனது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் தீவிர வாசிப்பாளராக இருந்தவர்.  அவர் தனக்கு மிகவும் நூல்கள் என லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', மார்க்சிம் கோர்க்கியின் 'தாய்' சிங்கள எழுத்தாளரான மகிந்த பிரசாத் மாசிம்புலாவின் ( Mahinda Prasad Masimbula ) ;செங்கொட்டான்', மோகன் ராஜ் மடவாலாவின் (Mohan Raj Madawala) 'ஆடரனீயா விக்டோரியா' ஆகிய நாவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிறுகதைகள் பலவற்றையும் தனக்குப் பிடித்ததாகவும் குறிப்பிட்டதாக டி.பி.எஸ்.ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் டொக்டர் கோவூர் பற்றி நன்கறிந்துள்ளோம். இலங்கையில் பகுத்தறிவாளர் அமைப்புன் தலைவராகக் குரல் கொடுத்தவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அவரது நூலொன்றும் வீரகேசரி பிரசுரமாக வெளியாகியுள்ளது. அவர் அடிக்கடி சத்ய சாயிபாபாவுக்குச் சவால் விட்ட பத்திரிகைச் செய்திகள் பலவற்றை வாசித்து வளர்ந்தவர்கள் நாம். அநுரா அவர்கள் தனது பாடசாலை நாட்களில் டொக்டர் கோவூரின் எழுத்துகளை விரும்பி வாசித்ததாகவும் கூறியிருப்பதாகத் தனது கட்டுரையில் ஜெயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அநுரா அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்களின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுய சரிதைகள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பதையும் மேற்படி கட்டுரை வெளிப்படுத்துகின்றது. இவர்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், காந்தி, டிட்டோ, காஸ்ட்ரோ, மற்றும் கிளின்டோ ஆகியோரும் அடங்குவர்.

மேலும் அவர் தன் வாசிப்புப் பற்றிக் கூறுகையில் தன்னை சோவியத் ருஷ்யாவின் இலக்கியம், நாவல்கள் , சிறுகதைகள் தன்னை ஆகர்சித்தவை  என்றும் , தன் வாழ்வை மாற்றியவை என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஜெயராஜ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்படி அநுராவின் வாசிப்பு பற்றிய தகவல்களையெல்லாம் அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தனது கட்டுரையில் தெரிவித்திருப்பார்.

அநுரா சிறந்த நீச்சல் வீரர் என்பதையும், அவர் சுமார் 2 கிலோ மீற்றர் வரையில் குளங்களில் நீந்தக் கூடியவர் என்பதையும் மேற்படி கட்டுரைவாயிலாக அறிந்து கொள்கின்றோம்.

மேலும் மேற்படி கட்டுரையிலிருந்து அநுரா ஜேவிபியின் இரண்டாவது புரட்சியின்போது அவரது ஒன்றுவிட்ட சகோதரான சுனில் ஐயா என்றழைக்கப்பட்ட சுனில் திசாநாயக்கவால்  இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் தலைமறைவாக இயங்கிய அநுராவின் இயக்கப்பெயர் அரவிந்த எனவும் ,சுனில் ஐயா பின்னர் அரச பயங்கரவாதத்தால் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகவும், அநுராவின் வீடு படையினரால் எரிக்கப்பட்டதாகவும் அறிந்து கொள்கின்றோம்.

டி.பி.எஸ்ஸின் ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பு Anura Kumara Dissanayake; “Leftist” Star Rises Over Sri Lanka.  - https://www.dailymirror.lk/plus/Anura-Kumara-Dissanayake-Leftist-Star-Rises-Over-Sri-Lanka/352-292657#

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்