Sunday, September 1, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற!

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

முடிந்த போரின் அழிவுகள் இன்னும்
படிந்தே இருக்கும் அனைவர் நினைவினில்.
நடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
நல்லெண்ணம் வளர்த்திட நடவடிக்கை எடுப்போம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

சட்டம் என்பது அனைவருக்கும் சமம்.
என்னும் நிலையினை ஏற்படுத்தவே வேண்டும்.
குற்றம் புரிந்தவர் எவராயினும் அவரைச்
சட்டத்தின் முன்னே நிறுத்தவே வேண்டும்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

காணமல் போனவர் நிலையினை காண்போம்.
கடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
அத்து மீறிய குடியேற்றத் திட்டங்களை
அடியோடு ஒழித்தல் மிகவும் அவசியம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

சார்பற்ற அரசு இல்லை என்றால்
யார் மனத்திலே  நம்பிக்கை எழுந்திடும்.
ஊர் ஒன்றாக வேண்டும் என்றால்
சார்பற்ற அரசின் இருப்பு அவசியம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

வரலாற்றுத் தவறுகள் பாடங்கள் ஆகட்டும்.
எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படவே வேண்டாம்.
நாட்டு மக்கள் அனைவரும் இணைந்திட
நல்லிணக்கம் தேவை என்பதை உணர்வோம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்