Friday, September 20, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளி நாம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

காலவெளி நாம்

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.

முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.

விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.


No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்