Wednesday, September 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்டுக் களித்திட: https://www.youtube.com/watch?v=snzGyWR-BwE

காட்சியும் சித்(த)து விளையாட்டும்!

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

நாம் காண்பதாக உணர்வது என்பதெல்லாம்
நம் மூளையின் மின்சமிக்ஞை என்றால்
வெளியில் இருப்பதாக எண்ணுவது எல்லாம்
உள்ளத்தின் மாயத் தோற்றங்கள் தானா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

வெளியில் விரிந்திருக்கும் காட்சி எல்லாம்
வெறும் சித்தத்தின் சித்து விளையாட்டா?
உண்மை என்றொன்று ஒன்று உண்டா?
உண்மையும் பொய்மையும் நாணயத்தின் பக்கங்களா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
சித்தம் வரைந்த சித்திரமா இவையெல்லாம்.
சித்தம் மீறிடும் சாத்தியம் உண்டா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்