- இன்று பாரிஸில் ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -
என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள். அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.
Sunday, May 25, 2025
என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
Thursday, May 22, 2025
இதய மருத்துவர் இராமசாமியின் ஆரோக்கியமான ஆலோசனைகள்!
இது என் மருத்துவ ஆலோசனை அல்ல. என் கருத்து மட்டுமே.
மருத்துவர் இராமசாமியின் ((Dr. ramasamy) அறிவுரைகளை உள்ளடக்கிய காணொளிகளை நான் பார்ப்பவன். இவரது இதய நோய் சம்பந்தமான அறிவுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மிகவும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர்களில் ஒருவராக இவரை நான் அடையாளம் காண்கின்றேன்.
இருதய மருத்துவர்கள் பலர் கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சர்ஜரி, ஸ்டெண்ட் பொருத்துவதைப் பரிந்துரை செய்கின்றார்கள். இதயம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் நன்கு ஓடும் நிலையிலுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பலர் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுப்பதற்காக பை பாஸ், ஸ்டென்ட்டைப் பரிந்துரை செய்வது தவறானது என்பதை இக்காணொளி மூலம் அறிய முடிந்தது.
Saturday, May 17, 2025
அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு!
* புகைப்படம் - India Sublime Arts
நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது. ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார். வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும் அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள். இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி. இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்
Friday, May 16, 2025
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' - திருத்திய இரண்டாம் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' - திருத்திய இரண்டாம் மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. இதன் பிடிஃஃப் கோப்பினை இணையக் காப்பகத்திலிருந்து பதிவிறக்கி வாசிக்கலாம். இணைப்புகள் இறுதியில் தரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித்தலைநகர் நல்லூர். நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிருந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு நூலிது. வரலாற்றுத் தகவல்கள், இடப்பெயர்கள் மற்றும் பழந்தமிழர்தம் கட்டடக்கலை, நகர அமைப்புக் கோட்பாடுகள் ஆகிவற்றின் அடிப்படையில் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு. இத்துறையில் வெளியாகியுள்ள முதனூல். இது மேலும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.
இதன் முதற் பதிப்பு ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு), மங்கை பதிப்பகம் (கனடா) ஆகியவற்றின் வெளியீடாக 1996இல் வெளியானது. இதன் திருத்திய பதிப்பு தற்போது மின்னூலாக வெளிவருகின்றது. விரைவில் அச்சு வடிவிலும் வெளிவரவுள்ளது.
ஆய்வு: கோப்பாய்க் கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
- 'எழுநா' இணையத்தளத்தில் வெளியான கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது கட்டுரை. -
தமிழர்களின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், இராஜதானியில் அமைந்திருந்த பிரதான கோட்டைக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் கொழும்புத்துறை, பண்ணைத்துறை மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இவற்றைப் பிரதான கோட்டையுடன் இணைக்கும் பிரதான வீதிகளில் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகியவை துறைமுகங்களாகவும் விளங்கின. இவற்றில் கோப்பாயில் அமைந்திருந்த கோட்டை பற்றி விபரிக்கின்றது இந்தக் கட்டுரை.
எண்பதுகளில் இக்கட்டுரையாசிரியர் தனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வின்பொருட்டுப் பேராசிரியர் கா. இந்திரபாலாவை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் , ’சுவாமி ஞானப்பிரகாசர் பல வருடங்களுக்கு முன்னரே கோப்பாய்க் கோட்டை பற்றியும், அது இருந்ததாகக் கருதப்படும் இடம் பற்றியுமொரு கட்டுரையொன்றினை ஆய்விதழொன்றில் எழுதியிருப்பதாகவும், அது யாழ். பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருப்பதாகவும் ’ குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரை ஜனவரி 1917 இல் வெளியான Ceylon Antiquary and Literary Register என்னும் வரலாற்றிதழின் 194, 195ஆம் பக்கங்களில் ‘Sankily’s Fortress at Kopay’ (சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை) என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை. கோப்பாய்க் கோட்டை பற்றிய ஆய்வுகள் செய்யும் எவரும் அந்தக்கட்டுரையினைத் தவறவிட முடியாது. அத்துணை முக்கியத்துவம் மிக்க கட்டுரை அது. அதிலவர் போர்த்துகேய வரலாற்றாசிரியரான தியாகோ தோ கூத்தோ (Diego do Couto) கொன்ஸ்தந்தீனு த பிறகன்சா என்னும் போர்த்துகேயத் தளபதிக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசன் செகராசசேகரனுக்கும் (இவனே முதலாம் சங்கிலி என்பது வரலாற்றாய்வாளர் கருத்து) நல்லூரில் நடந்த போரின் போது சங்கிலி கோப்பாயில் அமைந்திருந்த கோட்டைக்கு ஓடியது பற்றியும், அந்தக் கோட்டை பற்றியும் குறிப்பிட்டிருந்ததைச் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு சுட்டிக்காட்டுவார்:
Thursday, May 15, 2025
நூலகத்தில் கிடைத்த புதையல்!
வழக்கம் போல் ஸ்கார்பரோ நூலகக் கிளைகளில் ஒன்றான , எக்ளின்டன் - கென்னடி சந்திக்கண்மையிலிருக்கும் கிளைக்கு நேற்று மாலை சென்றிருந்தேன். அங்கு நூல்கள் சிலவற்றை விற்பனைக்குப் வைத்திருந்தார்கள். அவற்றிலொன்று இந்த நூல். கற்பகம் பதிப்பக வெளியீடான (2023) பாரதியார் கவிதைகள். நூலக நூல்களில் ஒன்றல்ல. யாரோ ஒருவர் நூலகத்துக்கு இலவசமாக வழங்கியிருக்க வேண்டும். விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
என் அபிமானக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் , ஆளுமைகளின் அல்லது அவர்கள் பற்றிய நூல்களை கண்டால் வாங்கி விடுவேன். இதனையும் அவ்விதம் வாங்கிக்கொண்டேன்.
பிழைத்த தென்னந்தோப்பு - மகாகவி பாரதியார்
வயலிடை யினிலே - செழுநீர்
மடுக் கரையினிலே
அயலெவரு மில்லை - தனியே
ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித்ததிலே - மரங்கள்
கணக்கிடத் தகுமோ?
நாற்றினைப் போலே - சிதறி
நாடெங்கும் வீழ்ந்தனவே!
Tuesday, May 13, 2025
யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! மேலுமொரு முக்கிய வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் எனது நூலின் இரண்டாவது அத்தியாயம் 'நல்லூரும் யாழ்ப்பாணமும்! இதில் நல்லூரும் ராஜதானியும் ஒன்று என்பார்கள் கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோர் அவை இரு வேறானவை என்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தர்க்க நியாயங்களின் அடிப்படையில் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோரின் கருத்தான நல்லூரும், யாழ்ப்பாணமும் வேறானவை என்னும் என் கருத்தை முன் வைத்திருப்பேன்.
நான் மீண்டும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினை மீண்டும் கனடாவிலிருந்து எழுதிய காலகட்டடத்தில் என்னிடமும் இந்நூல் இருக்கவில்லை. ஏனயோர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலெயே என் தர்க்கத்தை முன் எடுத்திருந்தேன். அதன்படி முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ. நடராசா ஆகியோரின் கூற்றுக்களுக்கமையவும், அவர்களின் தர்க்கத்தின் அடிப்படையிலும், கைலையமாலையில் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியவைத் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதன் அடிப்படையிலும், நல்லூர் வேறு, யாழ்ப்பாணம் வேறு என்னும் முடிவுக்கு வந்திருந்தேன்.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
