Saturday, June 21, 2025
விதவைத்திருமணத்தை வலியுறுத்தும் வவுனியூர் இரா. உதயணனின் 'வலியின் சுமைகள்' ! - வ.ந.கிரிதரன் -
வவுனியூர் இரா. உதயணன் இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை 'விதி வரைந்த பாதையிலே' என்னும் நாவலுக்காகவும், 'பனிநிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி விருதினையும் பெற்றவர். இவரது நாவல்கள், சிறுகதைகள் நூலுருப்பெற்றுள்ளன. தினகரம், வீரகேசரி பத்திரிகைகளில் தொடர்களாக இவரது நாவல்கள் வெளிவந்துள்ளன. இவ்விதம் வீரகேசரியில் 54 அத்தியாயங்கள் தொடராக வெளியான நாவலான 'வலியின் சுமைகள்' நாவல் ஓவியங்களுடன் கூடிய அத்தியாயங்களுடன் 'இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம்' வெளியீடாக , 2015இல் வெளிவந்துள்ளது. நூலுக்கான் ஓவியங்களை வரைந்திருப்பவர் ஓவியர் கெளசிக். இந்நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.
வன்னியூர் இரா. உதயணனின் எழுத்து சரளமானது. வாசிப்புக்கு எவ்வித தடங்கலும் தராத தெளிந்த நீரோடை போன்றது. ஆங்காங்கே மண் வாசனை தெறிக்கும் இயற்கை வர்ணனைகளை உள்ளடக்கியது. வாசிப்பைத்தூண்டும் கதைப்பின்னல்களைக்கொண்டது. மானுட சமுதாயத்துக்கு பயன் தரும் சமுதாயப் பிரக்ஞை மிக்க முற்போக்குக் கருத்துகளை உள்ளடக்கியது. 'வலியின் சுமைகள்' நாவலிலும் இப்பண்புகள் அனைத்தையும் காணலாம்.
Friday, June 20, 2025
தேவகாந்தனின் 'சாம்பரில் திரண்ட சொற்கள்' பற்றி... - வ.ந.கிரிதரன் -
'சாம்பரில் திரண்ட சொற்கள்' எழுத்தாளர் தேவகாந்தனின் அண்மையில் வெளியான நாவல். 'தாய்வீடு' பத்திரிகையில் தொடராக வெளிவந்த நாவல் 'தாய்வீடு' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. சிறப்பான வடிவமைப்புடன், ஓவியர் ஜீவாவின் அழகான ஓவியங்களுடன் வெளிவந்துள்ள நூல். ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளின் வெற்றிக்கு அவற்றில் வெளியான ஓவியங்களும் ஒரு காரணம். 'பொன்னியின் செல்வன்' நாவலில் எம்மையெல்லாம் கவர்ந்த பாத்திரமான வாணர் குலத்து வீரனான வல்லவரையன் வந்தியத்தேவனை . அவனை உயிர்த்துடிப்புடன் வரைந்த் ஓவியர்களான மணியம், வினு, மணியம் செல்வன், பத்மவாசன் ஆகியோரின் ஓவியங்கள் வாயிலாகத்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'கடல்புறா' நாவலின் நாயகன் இளையபல்லவன் என்றழைக்கப்படும் கருணாகரத்தொண்டைமானை ஓவியர் லதாவின் ஓவியங்கள் மூலம்தான் நினைவில் வைத்திருக்கின்றோம். 'ராணிமுத்து' வெளியீடாக வெளிவந்த மாத நாவல்களும் ஓவியங்களை உள்ளடக்கியே வெளிவந்தன. நாவல்களின் ஓவியங்களும் முக்கியமானவை. மேற்படி நாவலும் இவ்விதமே ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது வடிவமைப்புக்கு வனப்பைத்தருவதுடன், வாசிப்புக்கும் வளத்தைத்தருகின்றது..
Tuesday, June 17, 2025
த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!
'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான த.பிச்சாண்டி எழுதியிருக்கின்றார். எம்ஜிஆரினுடனான தன் அனுபவங்களை அந்நூலில் அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்நூல் பற்றி அந்தமழை.காம் தளத்தில் வெளியாகியுள்ள மதிமலர் என்பவரின் நூல் அறிமுகக் குறிப்பு என் கவனத்தை ஈர்த்தது. எம்ஜிஆர் என்னும் மனிதரின், முதல்வரின் மனிதாபிமானம் மிக்க ஆளுமையை வெளிப்படுத்தும் அறிமுகம். நூலை முழுமையாக வாசிக்கும் ஆர்வத்தைத்தரும் அறிமுகம்.
இந்நூலுக்கு இம்முறை தமிழ் இலக்கியத்தோட்டம் வழங்கும் அல்- புனைவுக்கான இயல் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்திமழை.காம் தளத்தில் வெளியான நூல் அறிமுகக் குறிப்பினை இங்கு பகிர்ந்துள்ளேன்.
நூல்: எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள், த.பிச்சாண்டி இ.ஆ.ப(ப.நி), பிவி பதிப்பகம், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-78. கைபேசி: 9884980760 விலை ரூ 860.
************************************************************************************************
(அந்திமழை.காம்) நூல் அறிமுகம்: என்ன செய்தார் எம்.ஜி.ஆர்.? எனக்குள் மணக்கும் எம்ஜிஆர் நினைவுகள்! - மதிமலர் -
திண்டுக்கல் மாவட்டத்தில் 1977-இல் நில உச்சவரம்பு அலுவலராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார் அந்த இளம் அதிகாரி. அச்சமயம் அங்கே குடகனாற்றில் வெள்ளம் வந்து ஏராளமான பேர் இறந்துவிட்டனர். எக்கச் சக்க சேதம்.
முதலமைச்சர் வந்து பார்வையிடும் வழியில் ஓர் இடத்தை நிர்வகிக்கும் வேலைதான் அந்த அதிகாரிக்கு. முதலமைச்சர் கையால் சேலைகள் வழங்கலாம் என விரும்பி உள்ளூர் பிரமுகர் ஒருவர் சேலைகளை அடுக்கி வைக்க, அவரை இவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். முதல்வரின் பயணத் திட்டத்தில் இது இடம் பெறவில்லை. உடைந்த அணையைப் பார்த்துவிட்டு, இந்த இடத்துக்கு வருகையில் பெரும் பெண்கள் கூட்டம் கூடிவிட்டது. அங்கே இறங்கும் திட்டம் இல்லை என்றாலும் மகளிர்கூட்டத்தைப் பார்த்து இறங்கினார் அவர். எங்களுக்கு சேலை கொடுக்கும் திட்டத்தை இவர் நிறுத்திவிட்டார் என இளம் அதிகாரி மீது அங்கிருந்த பெண்கள் புகார் கூறினர். முதலமைச்சர் இவரை முறைத்தார். நாளைக்கு மதுரைக்கு வந்து என்னைப் பாருங்க. எனக்கு கெட்ட பேர் வாங்கித்தருவதற்காகவே இருக்கீங்களா? என்றவாறு அவர் புறப்பட்டார். உடன் வந்திருந்த மாவட்ட கலெக்டரும் மூத்த அதிகாரிகளும் உனக்கு தண்ணியில்லா காடுதான் என்று சொன்னார்கள்.
Monday, June 16, 2025
எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணனுடன் ஒரு மாலைப்பொழுது!
இன்று கனடாவுக்குக் குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்திருக்கும் எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான என் பால்ய காலத்து நண்பன் திருநாவுக்கரசுக்கு (வவுனியா) நன்றி.
உதயணன் அவர்களுடனான இச்சந்திப்பில் எழுத்தாளர் தேவகாந்தன், சமூக,அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
'ஸ்டூஃப்வில்' (Stouffville) நகரில் அமைந்துள்ள 'சந்தோஷ் ஸ்பைஸ் பலஸ்' (Santhosh Spice Palace) உணவகத்தில் அனைவரும் கலந்துரையாடினோம்.
![]() |
| எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன், நான் , சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன். |
புகலிட அனுபவங்கள், எழுத்துலக அனுபவங்கள், வவுனியா பற்றிய நனவிடை தோய்தல்கள், ஈழநாடு பத்திரிகையுடனான எழுத்துலக அனுபவங்கள் எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றது உரையாடல். எம் வெளியான நூல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டோம்.
வவுனியூர் இரா.உதயணன் நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதை என இவரது இலக்கியப்பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. ஏப்ரில் மாத ஜீவநதி சஞ்சிகை 'வவுனியூர் இரா. உதயணன்' சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் இவரது நாவல்கள் தொடர்களாக வெளியாகியுள்ளன. 'விதி வரைந்த பாதையிலே' நாவலுக்காக இலங்கைச் சாகித்திய மண்டல விருதினையும், 'பனி நிலவு' நாவலுக்காக எழுத்தாளர் கு,சின்னப்பபாரதி விருதினையும் பெற்றவர்.
![]() |
| இடமிருந்து வலமாக - எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன், நான் , எழுத்தாளர் தேவகாந்தன். |
எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணனுடனான மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்தது. இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கின்றீர்கள்.
'முத்தமழை' பாடல் பாடகி Dhee யின் குரலில்...
'முத்தமழை' பாடலின் பாடகி Dhee யின் குரலுக்கான காணொளியினையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
பாடகி டீ யின் குரல் நவகாலத்துக்குரியது. பாடகி சின்மயியின் குரல் தொண்ணூறுகளுக்கு உரியது. இருவர் குரல்களும் தனித்துவமானவை. ஆனால் இருவர் குரல்களிலும் பாடலைக் கேட்டு விட்டு, மீண்டும் ஒரு தடவை நினைவு கூர்ந்தால், முதலில் நினைவுக்கு வருவது பாடகி டீயின் குரல்தான். காரணம் அதன் தனித்துவம்.
பாடகி சின்மயிக்கு இப்பாடல் திரையுலகில் அவரது இரண்டாவது ஆட்டத்தை ஆட வழி வகுத்துள்ளது. அது வரவேற்கத்தக்கது. அவர் ஆணாதிக்கத் திரையுலகில் இதுவரை அடைந்த துயர் இனியாவது ஒழியட்டும். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதி கிடைக்கட்டும்.
'தக லைஃப்' திரையில் எதிர்பார்த்த வெற்றியை அடையாவிட்டாலும், அது எழுப்பிய சர்ச்சைகளால் , இயக்கத்தால், ஒளிப்பதிவால், இசையால் முக்கியமானதொரு திரைப்படமாக நிலைத்து நிற்கும். ஏ.ஆர்.ரகுமான் , மணிரத்தினம் கூட்டணியில் உருவான முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். நடிகை திரிஷா, நடிகர் சிலம்பரசனின் திரையுலக வாழ்க்கையிலும் முக்கிய படிகளாக அமையும்.
பாடலைக் கேட்க
Sunday, June 15, 2025
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.
இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். (ஓவியம் - AI )
எந்தையின் நினைவுகள் கூடவே
அன்னையின் நினைவுகள்!
அன்னையின் நினைவுகள் கூடவே
அன்னை மண்ணின் நினைவுகள்!
இந்நாளில் எந்தையரை ,
இந்நாளில் அன்னையரை,
இந்நாளில் அன்னை மண்ணை
நினைவில் வைப்போம்.
நினைவில் வைப்போம்.
எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார் - பாடகர் டி.என்.சேசகோபாலன்
https://www.youtube.com/watch?v=yiMVXlvVa8k
கவிதை; எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
Saturday, June 14, 2025
'தக் லைஃப்' 'முத்தமழைப் பாடலின் பாடகி சின்மயி பாடும் காணொளி!
இப்பொழுது 'தக் லைஃப்' 'முத்தமழை' பாடலைப் பாடகி சின்மயி பாடுவதாக அமைந்துள்ள காணொளியை வெளியிட்டிருக்கின்றார்கள் படக்குழுவினர். நடிகை திரிஷா கிருஷ்ணனை நினைவில் வைத்திருக்கும் முதலிரு வேடங்கள் 'பொன்னியின் செல்வன்' குந்தவைப் பிராட்டியார். அடுதத்து 'தக் லைஃப்' இந்திராணி. இரு படங்களையும் இயக்கியிருப்பவர் மணிரத்தினம். இது போல் நடிகை ஐஸ்வர்யா ராயை நினைவில் நிறுத்தி வைத்திருக்கும் வேடம் 'பொன்னியின் செல்வன்' பழுவூர் ராணி நந்தினி.
டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!
டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை! டொரோண்டோ ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...


