எம்ஜிஆர் தனியார்
பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர்
விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அளவுக்குத் தொலைநோக்கு
அற்றவர்கள். எம்ஜிஆர் என்னும் மனிதருக்கு இருந்திருக்கும் தொலைநோக்கு
இவர்களுக்கு இல்லையென்றே கருத வேண்டியிருக்கின்றது.
எம்ஜிஆர்
அனுமதியளித்த தனியார் கல்லூரிகளை உருவாக்கியவர்கள் உழைத்திருக்கலாம். ஆனால்
அவற்றை உருவாக்கியவர்கள் அவற்றில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதியை
அரசுக்கு வழங்கினர். இவ்விதம் உருவான க்ல்லூரிகளைத் தமிழக அரசு உருவாக்க
வேண்டுமென்றால் அதற்குப் பெருந்தொகை நிதி வருடா வருடம்
தேவையாகவிருந்திருக்கும். அது அரசுக்கு மிகுந்த நிதி நெருக்கடியை
ஏற்படுத்தியிருக்கும். அதற்குப் பதில் பல்கலைக்கழக, பள்ளிப்படிப்பற்ற
எம்ஜிஆர் , அதன் அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்த முடிவு அரச நிலங்களில்
அரசு கல்லூரிகளை அமைப்பதை விட, அவற்றில் தனியார் அமைப்பதற்கு அனுமதி
அளிப்பதன் மூலம் அரசின் பாரம் குறைகின்றது. அதே சமயம் அவ்விதம்
உருவாக்கப்படும் கல்லூரிகளில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதி அரசுக்குக்
கிடைக்கின்றது. இது மிகவும் நல்லதொரு முடிவு. மேலும் அதிக அளவில் மாணவர்கள்
பொறியியல், மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் ஏற்படுகின்றது.