Wednesday, October 15, 2025
தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana )உதவி; VNG
அண்மையில் நான் வாசித்த சிறுகதைகளில் நினைவில் நிற்கும் சிறுகதைகளில் ஒன்று தமிழ்நதியின் 'மெத்தப் பெரிய உபகாரம்'. அவரது 'மாயக்குதிரை' தொகுப்பிலுள்ள இறுதிச் சிறுகதை. இந்தக் கதை ஏன் என்னை மிகவும் கவர்ந்திருந்தது? அதற்கான காரணங்களைக் கூறுவதற்கு முன் கதை பற்றிய சுருக்கம்.
கதை இதுதான். கதை சொல்லி 'டொரோண்டோ', கனடாவில் வாழும் தமிழ்ப்பெண். தாயைப்பார்ப்பதற்காக ஊருக்குச் செல்லும் பெண். ஃபிராங்க்பேட் அல்லது இலண்டன் வழியாகச் செல்வதற்கு டிக்கற் கிடைக்காததால் , சூரிச் வழியாகச் செல்லும் பயணி. சூரிச்சில் டிரான்சிட்டில் எயார் லங்கா விமானத்துக்காகக் காத்து நிற்கின்றாள். அப்போதுதான் அங்குள்ள விமான நிலைய அதிகாரியொருவர் மொழிதெரியாத ஒரு மூதாட்டியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதைக் காண்கின்றாள். அவ்வதிகாரி பல் மொழிகளில் அம்மூதாட்டியை அவளது கடவுச்சீட்டை, போர்டிங் பாஸைக் கேட்டுக் கேள்விகள் கேட்டுக களைத்துப் போயிருந்தார். அம்மூதாட்டியோ அவரது கேள்விகளுக்கெல்லாம் 'ஊருக்குப் போறன்' என்று பதிலிறுத்துக் கொண்டிருந்தார்.
கதை சொல்லியான கனடாப் பெண்ணுக்கு அம்மூதாட்டி தமிழ்ப்பெண் என்பது தெரியும். உதவியிருக்கலாம். ஆனால் உதவவில்லை. பிரயாணக்களைப்பு, உறக்கமின்மை, கவலை, பொறுப்பேற்றலின் மீதான பின்வாங்கல் போன்ற காரணங்களில் ஏதாவதொன்றுடன் அங்கு தமிழ்ச் சாயல் கொண்ட இன்னுமோர் இளம் பெண் இருந்ததும் காரணமாகவிருக்கலாம் கதை சொல்லியே தன் நிலைக்கான காரணத்தை இவ்விதம் சுய விமர்சனம் செய்கின்றாள்.
Tuesday, October 14, 2025
தொல்லியல் அறிஞர் , அமரர் நடன காசிநாதன் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
தொல்லியல் அறிவ்ஞர் நடன காசிநாதன் 6 அக்டோபர் 202 அன்று மறைந்தார். இவரது மறைவுச் செய்தியைத் தாமதமாகவே அறிந்தேன். இவரது மறைவு இத்துறைக்குப் பேரிழப்பு. இவரை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பேன். எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஸ்நேகா பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவந்தபோது , ஸ்நேகா பதிப்பக அதன் நூல்களுக்கான வெளியீட்டு நிகழ்வொன்றினை நடத்தியது. அப்போது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலினை வெளியிட்டு வைத்தவர் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன். அதனைப் பெற்றுக்கொண்டவர் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள். இவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது.....
எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் விருது ரூபா 5 இலட்சம் , அவர் மறைவுக்குப் பின்னர் ஐவருக்குப் பிரித்து வழங்கப்பட்டதாக அறிகிறேன். விருது வழங்கப்பட்டது ரமேஷ் பிரேதன் என்னும் எழுத்தாளரின் இலக்கியப் பங்களிப்புக்காக. பலருக்கு அவர்கள்தம் பல்துறைப் பங்களிப்புகளுக்காக அவர்கள் மறைந்த பின்னரும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் உயிருடன் இருக்கும்போது ஒருவருக்கு வழங்கப்பட்ட விருது, அவரது மறைவுக்குப்பின்னர் வேறு சிலருக்கு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது.
ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்பட்ட விருது திருப்பி எடுக்கப்படாமல், அவரது படைப்புகளின் தொகுப்புகளை வெளியிடப் பயன்படுத்தியிருக்கலாம்.அல்லது அவரது பெயரில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கப்பயன்படுத்தியிருக்கலாம். அதுலிருந்து கிடைக்கும் வங்கி வட்டியிலிருந்து வருடா வருடம் இலக்கியப் போட்டிகள் நடத்தியிருக்கலாம். அல்லது விருதுகள் வழங்கியிருக்கலாம்.
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
Monday, October 13, 2025
போர் இலக்கியம் படைத்த போர்ச் செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் (Ernest Taylor Pyle)
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எர்னெஸ்ட் டெய்லர் பைல் ஆரம்பத்தில் பயணக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது பயணக் கட்டுரைகள் வெறும் தகவற் பெட்டகங்களாக இருந்ததில்லை. அவற்றில் அவர் பயணங்களில் சந்தித்த மானுடர்களின் வாழ்க்கை இருக்கும். அவர்கள்தம் துயரம் இருக்கும். மானுட நேயம் மிக்க அவரது இந்த எழுத்துப்போக்கு பின்னர் அவர் போர்ச் செய்தியாளராகப் பயணித்தபோது பெற்ற அனுபவங்களிலும் இருந்தது.
இரண்டாம் உலகப்போரின்போது இவர் அமெரிக்கப் படையினருடன் வட ஆபிரிக்கா, சிசிலி, இத்தாலி, பிரான்ஸ், பசுபிக் தீவுகள் போன்ற இடங்களுக்கு முன்னணிச் செய்தியாளராகப் பயணித்திருக்கின்றார்.
போர் இலக்கியம் , போர் பற்றிய இலக்கியம் , புகலிட இலக்கியம் பற்றி....
அண்மையில் டொராண்டோவில் நடந்த எழுத்தாளர் தமிழ்நதியின் நூல்களின் வெளியீட்டில் கவிஞர் சேரன் ஆற்றிய உரையினைத் தனது முகநூற் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் கவிஞர் போர் இலக்கியம் பற்றிப் பின்வருமாறு குறிபிட்டிருந்தார்:
காலத்தால் அழியாத கானம் - "அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும் "
"அய்யனாரு நெறஞ்ச வாழ்வு கொடுக்கணும்
ஆயுசுக்கும் நெனைச்சதெல்லாம் நடக்கணும்
உன் மனசும் என் மனசும் ஒன்னு போல இருக்கணும் " - கவிஞர் மாயவநாதன் -
'காவல் தெய்வம்' ஜெயகாந்தனின் குறுநாவல். கைவிலங்கு என்னும் பெயரில் கல்கி சஞ்சிகையில் வெளியானது. நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் தயாரிப்பில் , கே.விஜயனின் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இசை - ஜி.தேவராஜ். பாடகர்கள் - தாராபுரம் சுந்தராஜன் & பி.சுசீலா. பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் மாயவநாதன். இவரது புகழ்பெற்ற பாடல்களில் நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ, தண்ணிலவு தேனிறைக்க, கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, சித்திரப்பூவிழி வாசலிலே ஆகியவை முக்கியமானவை.
இப்பாடலின் சிறப்பு - நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் மிகுந்த திரையுலகில், முதிய நடிகரும், இளம் நடிகையும் ஆடிப்பாடும் சூழலில், இளம் நடிகர்களின் காதல் காட்சிகள் பசுமையாக, இயல்பாக, இனிய இளங்காலைப்பொழுதைப்போல் மகிழ்ச்சியைத் தருகின்றன. இளம் சிவகுமாரும், லட்சுமியும் தம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் இப்பாடலின் ஒளிப்பதிவும் என்னைக் கவர்ந்தது. ஒவ்வொரு சட்டமும் நினைவில் நிற்கும் வகையில் எடுக்கப்பட்டதாக இப்பாடலைப் பார்க்கையில் உணர்ந்தேன். நீங்களும் உணர்வீர்கள். ஒளிப்பதிவாளர் விஜயன்.
காவல் தெய்வம் படத்தின் இன்னுமொரு சிறப்பு - நடிகர் திலகம் கெளரவ் வேடத்தில் , ஆனால் நினைவில் நிற்கும் பாத்திரத்தில் கொலைக்குற்றவாளியான 'சாமுண்டி'யாக நடித்திருப்பார். ராணிமுத்து பிரசுரங்களின் தொடக்கக் காலத்தில் காவல் தெய்வம் என்னும் பெயரில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=5-Z-s46dNB0&list=RD5-Z-s46dNB0&start_radio=1
டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
Sunday, October 12, 2025
உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன!
![]() |
| ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! |
இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால் இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது. பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம். ]
இதன் விளைவே முக்கியமான சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

.png)
.png)
.png)
