Monday, October 13, 2025
போர் இலக்கியம் படைத்த போர்ச் செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் (Ernest Taylor Pyle)
அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தைச் சேர்ந்த எர்னெஸ்ட் டெய்லர் பைல் ஆரம்பத்தில் பயணக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது பயணக் கட்டுரைகள் வெறும் தகவற் பெட்டகங்களாக இருந்ததில்லை. அவற்றில் அவர் பயணங்களில் சந்தித்த மானுடர்களின் வாழ்க்கை இருக்கும். அவர்கள்தம் துயரம் இருக்கும். மானுட நேயம் மிக்க அவரது இந்த எழுத்துப்போக்கு பின்னர் அவர் போர்ச் செய்தியாளராகப் பயணித்தபோது பெற்ற அனுபவங்களிலும் இருந்தது.
இரண்டாம் உலகப்போரின்போது இவர் அமெரிக்கப் படையினருடன் வட ஆபிரிக்கா, சிசிலி, இத்தாலி, பிரான்ஸ், பசுபிக் தீவுகள் போன்ற இடங்களுக்கு முன்னணிச் செய்தியாளராகப் பயணித்திருக்கின்றார். இவரது போர் பற்றிய பதிவுகளில் இராணுவ வெற்றி தோல்விகளுடன் படை வீரர்களின் உள்ளத்து உணர்வுகள் , அவர்கள் எதிர்கொண்ட சூழல்கள்,. அப்போது அவர்கள் அடைந்த மன உணர்வுகள் என்பவை நிறைந்திருக்கும். அதுவே பின்னர் அவரது மறைவுக்குப் பின்னர் அவரது போர்ப்பதிவுகளுக்குப் புலியட்சர் விருது கிடைக்கக் காரணமாகவிருந்தது.
இவரது The Death of Captain Waskow என்னும் கட்டுரை சிறந்த போரிலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிற்து.
போர்ச்செய்திகளைத் தருவதற்காகப் படையினருடன் பயணித்த இவர் ஜப்பானியப் படைவீரரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமானார்.
இவர் எழுதிய நூல்கள்: “Here Is Your War”, “Brave Men”
சிறந்த போரிலக்கியம் படைத்த போர்ச்செய்தியாளர் எர்னெஸ்ட் டெய்லர் பைல் என்று இவர் மதிக்கப்படுகின்றார். இவரது மறைவுக்குப் பின்னர் இவரது எழுத்துகளுக்குப் புலியட்சர் விருது வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!
ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை! வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 5...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
.png)
No comments:
Post a Comment