கவிஞர் வாலியின் வரிகளில், எம்.எஸ்.வி.யின் இசையில், டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில் ஒலிகும் இந்தப் பாடல் என் பால்ய பருவத்துடன் பின்னிப் பிணைந்ததொன்று. அப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் , ஏதோவொரு நிகழ்வில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல். எம்ஜிஆர் படப் பாடல்களுக்கு உரிய சுறுசுறுப்பு, எளிய இனிய வரிகள், உற்சாகம், மகிழ்ச்சி, வேகம் , இன்குரலினிமை , தொய்வற்ற இன் மெல்லிசை, நிறைந்த பாடல்.
அப்போது எம்ஜிஆர் திமுகவுக்காக இயங்கிக்கொண்டிருந்தார். பாடலில் எவ்வளவு இலாகவமாகக் கவிஞர் வாலி சூரியன், தமிழ் போன்ற சொற்களைக் கையாண்டிருக்கின்றார்!
இன்னுமொரு விடயத்திலும் இப்பாடல் நினைவில் நிலைத்து நின்று விட்டதற்குக் காரணம் - அப்பா பழைய காலத்து ஆள். பாகவதர், பி.யு.சின்னப்பா அவரது சுப்பர் ஸ்டார்கள், ஆனால் சிவாஜியை அவருக்கும், அம்மாவுக்கும் பிடிக்கும். ஆனால் அவருக்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள 'சந்திரோதயம்' படம் பிடித்திருந்தது. அதில் இடம் பெற்றிருக்கும் 'காசிக்குப் போகும் சந்நியாசி', கவிஞர் பாரதிதாசனின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்னும் பாடல்களுடன், பத்திரிகையாளராக அமைந்திருந்த எம்ஜிஆரின் வேடமும் முக்கிய காரணங்கள்.
* 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG
No comments:
Post a Comment