இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் உருவான இலக்கியப் போக்குகள் மூன்று: முற்போக்கு இலக்கியம், நற்போக்கு இலக்கியம் & பிரபஞ்ச யதார்த்தவாதம். இம்மூன்று இலக்கியப் போக்குகளுமே இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறுகள்.
அக்காலகட்டத்தில் இவற்றின் அடிப்படையில் தர்க்கங்கள் பல நிகழ்ந்தன. அவ்விதமானதொரு போக்கு அதன் பின் தொடரவில்லையென்பது துரதிருஷ்ட்டமானது.
இம்மூன்று பிரிவுகளிலும் தடம் பதித்த ஆளுமைகள் பலர். இப்போக்குகளின் முன்னோடிகள், முன்னோடிகளைப் பின்பற்றிய இலக்கிய ஆளுமைகள் , இவர்களின் படைப்புகள், அவை பற்றி நிகழ்ந்த தர்க்கங்கள் இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவை. இவை பற்றிய விரிவான போதிய ஆய்வுகள் இதுவரை வெளியாகவில்லையென்பதும் கவனிக்கத்தக்கது.
இவரை இவரது படைப்புகளூடு ஏற்கனவே , என் சிறு வயதிலிருந்து , அறிந்திருந்தபோதும் புகலிடத்தில்தான் இவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இவர் அப்போது எழுதிய வான் கடிதங்கள் இன்றும் என்னிடம் அவர் நினைவாக உள்ளன. அத்துடன் இவர் 'டொரோண்டோ' வந்திருந்தபோது , இவர் பற்றிய நிகழ்வுகளிலும், நேராகவும் சந்தித்திருக்கின்றேன். அந்நினைவுகளும் பசுமையாக என் நினைவுகளில் படிந்து கிடக்கின்றன.
எஸ்பொ அவரை அறியாதவர் தமிழ் இலக்கிய உலகில் யாரிருக்க முடியும்?
* 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி- VNG
No comments:
Post a Comment