'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Googel Nano Banana) உதவி; VNG 
பாடகி வாணி ஜெயராமுக்குச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் விருதினைப் பெற்றுத்தந்த பாடல். இசை - எம்.எஸ்.வி. ]
பாடலின் வரிகள் கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப் பாடல் வரிகளிலில் அடங்கும். இப்பாடலைக்கேட்கையியெல்லாம் இவ்வரிகளைக் கவிஞர் மிகவும் இலகுவாக, அனுபவித்து எழுதியிருப்பார் என்று நான் நினைப்பதுண்டு. கவிஞருக்கு மானுட வாழ்க்கை பற்றிய பாடல்கள் கை வந்த கலை. வாழ்க்கை அனுபவத்தின் சாரத்தினைப் பிழிந்து எடுத்து வைத்த வரிகள்.
வாணி ஜெயராமை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடல்களில் முதன்மையானது. அவ்வளவு இலகுவாகப் பாட முடியாத பாடலைச் சிறப்பாகப் பாடியிருக்கின்றார்.
நடிகை ஶ்ரீவித்யாவை நினைத்தாலும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் , என்னைப்பொறுத்த வரையில் கே.பாலச்சந்தரின் 'அபூர்வ இராகங்கள்' தான். பாடகி பைரவியாகவே மாறியிருப்பார். உண்மையில் ஶ்ரீவித்யா தன் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி போல் சிறந்த பாடகியாக வந்திருக்க வேண்டியவர். நடிப்பில் கவனத்தைத்திருப்பியதால் அதனைத் தவற விட்டதாகவே உணர்கின்றேன்.இத்திரைப்படத்துக்கு இன்னுமொரு முக்கிய விடயமுமுண்டு. ஶ்ரீவித்யா நடிகர் கமல் மீது கொண்டிருந்த நிறைவேறாத காதல் அனைவரும் அறிந்ததே. அது ஆரம்பித்தது இத்திரைப்படத்தில்தான் என்றொரு கதையும் உண்டு. அவர் முடிவு துயர் நிறைந்தது. அப்போதும் அவர் தன்னை இறுதியாகப் பார்க்க அனுமதித்தவர் நடிகர் கமலகாசனைத்தான்.
அவர் நடிப்பில் வெளியான பாலச்சந்தரின் இன்னுமொரு படம் - 'நூற்றுக்கு நூறு'. அதிலும் அவர் ஆசிரியரான ஜெய்சங்கர் மீது காதல் கொள்ளும் மாணவியாகச் சிறப்பாக நடித்திருப்பார். அதுவும் நிறைவேறாத காதல்.ஆனால் அப்படத்தில் நடிப்புக்கு முக்கிய இடத்தை இயக்குநர் வழங்கியிருப்பது வில்லி நடிகை விஜயலலிதாவுக்குத்தான். நினைவில் நிற்கும் நடிப்பை வழங்கியிருப்பார் அவர்.
இப்பாடலில் பிடித்த கவிஞரின் வரிகள் சில:
"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்"
"ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்"
"நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க"
"வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தை போல"
https://www.youtube.com/watch?v=8TTMY9u0rTY
.png) 
  
 
 
 
No comments:
Post a Comment